ஊரார் காசில் பேரு வாங்கும் உதயநிதி ஸ்டாலின்...!! அப்பாவையே மிஞ்சிட்டார் என்று அலறும் உபிக்கள்...!!

By Asianet TamilFirst Published Sep 10, 2019, 12:08 PM IST
Highlights

தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதைப்போல  இளைஞரணி செயலாளர் பொறுப்பேற்ற கையோடு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து பீதியை கிளப்பினார் உதய், 
 

தன் அதிரடி திட்டங்கள் மூலம், தந்தையைப்போலவே தொண்டர்கள் செலவில்  ஒசியில் பெயரெடுக்கிறார் வாரிசுத்தலைவர் என்ற விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார் உதயநிதி. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை எப்படியாவது வீழ்ந்த வேண்டும் என்று வியூகம் வகுத்து நமக்கு நாமே  திட்டம் தொடங்கி தமிழகம் முழுவதற்கும் டூர் சென்றார் ஸ்டாலின்.  ஆனால் எதிர்பார்த்தபடி தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை.  மாறாக கட்சி தொண்டர்களின் காசைக் கரியாக்கி அரசியலில் தன் இருப்பை தக்கவைத்துக் கொண்டதுதான் மிச்சம் என்று எதிர்கட்சிகளால் அப்போது  விமர்சிக்கப்பட்டார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் திமுக இல்லை, அதனால் கட்சி தொண்டர்களுக்கு வருமானமும் இல்லை. ஆனாலும் பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சாரம், ஆர்பாட்டம், போராட்டம் என அனைத்திற்கும்  மாவட்டச் செயலாளர்கள் முதல் வட்டச்செயலாளர்கள் வரை  நிதி திரட்டி ஆள் கூட்டி செலவு  செய்ய வேண்டும் என்பது தலைமையின் உத்தரவு. 

இதனால் கட்சி தொண்டர்கள் கை காசுப்போட்டு செலவு செய்து  செலவு செய்து நொந்து நூடுல்ஸ்ஸாகி போயுள்ளனர். இந்த நிலையில் தனக்கடுத்து கட்சியில் முக்கிய தலைவராக தன் மகன் உதயநிதியை உருவாக்கும் வேலையில் இறங்கியுள்ள ஸ்டாலின். கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லாமலிருந்த உதய்க்கு , தனக்கு தளபதி என்று பெயர் வாங்கிக்கொடுத்த திமுக இளைஞரணி செயலாளர் பதிவியையே வாரி வழங்கினார். பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றி வரும் வகையில் அவருக்கும் ஒரு டூர் பிளான் ஏற்பாடு செய்துள்ளாராம் ஸ்டாலின். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதைப்போல  இளைஞரணி செயலாளர் பொறுப்பேற்ற கையோடு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து பீதியை கிளப்பினார் உதய், 

அதாவது தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் நீர் நிலைகள் உள்ளது இவற்றில் அரசு தூர்வாரத நீர் நிலைகளை திமுக இளைஞர் அணியினர் தூர்வாரி சீரமைப்பர் என்பதுதான் அந்த அறிவிப்பு. இத்திட்டத்தின் மூலம் இளைஞர்கள் புது ஊக்கம் பெறுவர் என்றும் எக்ஸ்ட்ரா பிட் போட்டார் உதய். பதவிக்கு ஆசைபட்டு லட்சக் கணக்கில் பணத்தை செலவு செய்து பொறுப்புக்கு வந்த பொறுப்பாளர்களுக்கும் புது ஆப்புதான் இந்த அறிவிப்பு.  இளைஞர் அணி நிர்வாகிகள் கையில் கழுத்தில் இருந்ததையெல்லாம் அடகு வைத்து பொக்லைன், புல்டேசர் என வாடகைக்கு எடுத்து குளத்தை தூர்வாரினால்,  நம்ம உதய் சார் சினிமா சூட்டிங்குக்கு போற கணக்கா, வெள்ளையும் சொள்ளையுமா ஊர் மக்கள் மத்தியில் போய் குளத்தை திறந்து வைத்து போட்டோக்கு போஸ் கொடுக்கிறார் என்பதுதான் அடிமட்ட உபிக்களின் குமுறல்.
 

click me!