சிவகங்கை தொகுதியில் ஹெச்.ராஜா வாக்கு பலித்து விடுமோ..? பீதியில் கார்த்தி சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Sep 10, 2019, 11:59 AM IST
Highlights

வருமான வரி வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவின் விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. 

வருமான வரி வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவின் விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. 

வருமான வரிக்கணக்கில் கடந்த 2015-16-ம் ஆண்டு முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 1.35 கோடியை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. 

அதில் விற்பனைத் தொகையைக் குறைச்சிக் காட்டி, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா வருமான வரித்துறை தொடுத்த ஒரு வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, கார்த்தி சிதம்பரம் தற்போது சிவகங்கை தொகுதி எம்.பி.யாக உள்ளார். ஆகையால், இந்த வழக்கை மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் கடந்த ஜூலை மாதம் அவசரமாக மாற்றி உத்தரவிட்டார். 

இந்த சிறப்பு நீதிமன்றம்தான், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீதான ஒரு கிரிமினல் வழக்கில் அவருக்குத் தண்டனை கொடுத்து, அவருடைய அமைச்சர் பதவிக்கு ஆப்பு வைத்தது. அதனால் இந்த சிறப்பு நீதிமன்றம் தன்னைச் சிறையில் தள்ளிவிடுமோ என்று பயந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், வரி ஏய்ப்பு வழக்கு என் மீது தொடரப்பட்ட காலத்தில், நான் மக்கள் பிரதிநிதியாக இல்லை. அதனால் இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். 

இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் வழக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை கேட்டறிய அவரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியது தொடர்பான உத்தரவு மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, விசாரணையை நீதிபதி அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ய அதிக வாய்ப்புள்ளதால் எந்த நேரத்திலும் சிவகங்கை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

click me!