நேற்று கனிமொழி... இன்று உதயநிதி... டெல்லி வரை மாஸ் காட்டும் திமுக..!

Published : Jan 12, 2020, 04:56 PM IST
நேற்று கனிமொழி... இன்று உதயநிதி... டெல்லி வரை மாஸ் காட்டும் திமுக..!

சுருக்கம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வாரம் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆஷி கோஷ் உள்பட பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருந்தனர்.

கனிமொழியை தொடர்ந்து, தி.மு.க. இளைஞரணி தலைவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் டெல்லி ஜேஎன்யூ மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வாரம் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆஷி கோஷ் உள்பட பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருந்தனர்.

இந்நிலையில், டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர்களை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கனிமொழியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஜேஎன்யூ மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். கட்டண உயர்வுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தமது ஆதரவை தெரிவித்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் இந்த நிமிடம்வரை, தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களை துணைவேந்தர் சந்திக்கவேயில்லை என்பது வருத்தமளிக்கிறது. மாணவர்களைத் தாக்கிய குண்டர்கள் யாரெனத் தெரிந்தும் இதுவரை FIRகூட பதிவு செய்யப்படவில்லை. குண்டர்களைப் பாதுகாப்பவர்கள், நாட்டை எப்படிப் பாதுகாப்பர் என நினைக்கையில் அச்சமாக இருக்கிறது. மேலும், ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது பற்றி திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவர் என கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?