பா.ஜ.க.வின் அடிமையா தி.மு.க? நெத்தியடி மாஜி..!

By Vishnu PriyaFirst Published Oct 15, 2019, 7:54 PM IST
Highlights

நாளை (அக்டோபர் 16) உலக உணவு தினத்தை முன்னிட்டு, ஐந்து காசு எடுத்து வரும் நபர்களுக்கு அரை பிளேட் பிரியாணி தரப்படும். இன்றைய தலைமுறையினர் நாணயத்தின் மட்பிப்பை அறிந்து கொள்ளவே இந்த முயற்சி. முதலில் வரும் நூறு பேருக்கு இப்படி பிரியாணி வழங்கப்படும். 

பா.ஜ.க.வின் அடிமையா தி.மு.க?  நெத்தியடி மாஜி..! 

 *    மாமல்ல புரத்தில் ஐந்து ரதம் அருகே பாரதப்பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருவரும் அமர்ந்து பேசி, இளரீர் குடித்த நாற்காலிகள் யாருக்கு என்பதில் மத்தியரசு, தமிழக அரசு மற்றும் நாற்காலியை செய்த கடை என மூன்று தரப்பும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிறது. இதில் லேட்டஸ்டாக காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, அதை தன்னிடம் ஒப்படைக்க இட்ட உத்தரவுக்கு ‘அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம். அந்த நாற்காலிகளை எங்களிடம் ஒப்படைங்க.’ என்றார். அதை பொதுப்பணித்துறை ‘முதல்வர் உத்தரவிடட்டும்!’ என்று மறுத்துவிட்டதாம். 

-    பத்திரிக்கை செய்தி

*    நாளை (அக்டோபர் 16) உலக உணவு தினத்தை முன்னிட்டு, ஐந்து காசு எடுத்து வரும் நபர்களுக்கு அரை பிளேட் பிரியாணி தரப்படும். இன்றைய  தலைமுறையினர் நாணயத்தின் மட்பிப்பை அறிந்து கொள்ளவே இந்த முயற்சி. முதலில் வரும் நூறு பேருக்கு இப்படி பிரியாணி வழங்கப்படும். 
-    ஷேக் முஜிபுர்ரஹ்மான் (பிரியாணி கடை உரிமையாளர், திண்டுக்கல்)

*    சிறையிலிருந்து விடுதலையானவுடன், சசிகலாவை தங்களின் பொதுச்செயலாளராக ஆக்கிவிடுவோம்! என்று அ.தி.மு.க.வினர் பேசிவருகிறார்கள். துரோகம் செய்தவர்களுடன் சசிகலா எப்படி சேருவார்? 
-    டி.டி.வி. தினகரன் (அ.ம.மு.க. பொதுச்செயலாளர்)

*    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையை நியாயப்படுத்தியுள்ளார். அவரை படுகொலை செய்தவர்களை நிச்சயம் வரலாறு போற்றிப் பாராட்டும்! என பயங்கரவாத செயலை ஆதரித்துள்ளார். அவர் மீது தேச துரோக வழக்கினை பதிவு செய்ய வேண்டும். 
-    கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

*    ஊழலின் ஊற்றுக்கண் தி.மு.க.தான். அ.தி.மு.க. ஆட்சியில் எங்கு ஊழல் நடந்துள்ளது? என்று அவர்களால் சொல்ல முடியுமா! அம்மாவின் வழியில் மிக நேர்மையான ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம். 
-    எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

*    கடற்கரையில் குவிந்திருந்த குப்பையை பிரதமர் மோடி அகற்றினார். ஆனால் உயர் மதிப்பு மிக்க ரூபாய் நோட்டுக்களை செல்லாது என திடீரென அறிவித்தார். ஜி.எஸ்.டி. வரி விதித்தார். இதனால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. எனவே வேண்டாத, ஆகாத குப்பையான இந்த ஜி.எஸ்.டி.யையும் அவர் அகற்றுவாரா?
-    இரா.முத்தரசன் (சி.பி.ஐ.யின் மாநில செயலாளர்)

*    எந்தப் படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதை தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்யக்கூடாது. தியேட்டர்களுக்கு எதிராக சினிமா தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுத்தால், முடிவு மோசமாக இருக்கும். எனவே சிறு பட்ஜெட் படங்களுக்கு பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
-    பாரதிராஜா (சினிமா இயக்குநர்)

*    பெண்களால் மட்டுமே குடும்பத்தை ஒழுக்கமான குடும்பமாக உருவாக்கிட முடியும். தங்கள் அப்பா, அம்மாவை மதிப்பது போல, தங்களின் மாமியார், மாமனாரையும் பெண்கள் மதிக்க வேண்டும். டி.வி. சீரியல்கள் மூலம் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. 
-    கிருபாகரன் (சென்னை  ஐகோர்ட் நீதிபதி)

*    மத்திய அரசின் அடிமையாக தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு உள்ளதாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். அப்படியானால், பா.ஜ. கூட்டணியில் நீங்கள் முன்பு இருந்தபோது அடிமையாகத்தான் இருந்தீர்களா? பதில் சொல்லுங்க ஸ்டாலின். 
-    பொன்.ராதாகிருஷ்ணன் (மாஜி மத்தியமைச்சர்)

*    பார்வை பறிபோனாலும், ஒரு போதும் நான் சோர்வடைந்தது இல்லை. பார்வையற்ற பெண் என மற்றவர்கள் என் மீது இரக்கம் காட்டுவதும் பிடிக்காது. எந்த  ஒரு பிரச்னை என்றாலும், முயற்சியை ஒரு போதும் கைவிடக்கூடாது. தோல்வியை ஏற்கக் கூடாது. நம் இலக்கை அடையும் வரை முயற்சியை தொடர வேண்டும். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை. 
-    பிரன்ஜால் பாட்டீல் (பார்வையற்றவராக இருந்தும் துணை கலெக்டராகி சாதித்திருப்பவர்)

click me!