அவரு பேச பேச பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும்...!! ராகுலை கலாய்த்த தேவேந்திர பட்னாவிஸ் ...!!

By Asianet TamilFirst Published Oct 15, 2019, 6:49 PM IST
Highlights

ராகுலுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. மாறாக வெளிநாடுக்கு செல்வதில் ஆர்வமாக உள்ளார். யுத்தம் செய்ய வேண்டிய நேரத்தில் தலைவர்கள் ஒடி விட்டார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அண்மையில் தெரிவித்தார். 

அவரின் பேச்சுக்களால் இறுதியில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என ராகுல் காந்தியை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பா.ஜ.க.-சிவ சேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. அதேசமயம் காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதனால் மகாராஷ்டிராவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். 

மகாராஷ்டிரா முதல்வரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் யவத்மால் மாவட்டத்தில் புசாத் பகுதியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 2014 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு 42 இடங்கள் கிடைத்தது. இந்த தேர்தலில் 24 இடங்களுக்கு மேல் அந்த கட்சி வெற்றி பெறாது. ராகுலுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. மாறாக வெளிநாடுக்கு செல்வதில் ஆர்வமாக உள்ளார்.

யுத்தம் செய்ய வேண்டிய நேரத்தில் தலைவர்கள் ஒடி விட்டார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அண்மையில் தெரிவித்தார். இப்பம் ராகுல் காந்தி இங்கு வந்துள்ளார் மற்றும் ஜி.எஸ்.டி., ரபேல் என பழைய விஷயங்களையே பேசுகிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரங்களை எழுப்பின. ஆனால் பா.ஜ.க.பெருன்பான்மை பலத்தை பெற்றது அதேவேளையில் காங்கிரஸ் வீழ்ந்தது. ராகுல் காந்தியின் பேச்சுக்களால் பா.ஜ.க.-சிவ சேனா வாக்குகள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!