மு.க.ஸ்டாலின் கைது செய்து ஏற்றப்பட்ட வாகனம் நிறுத்தம்... ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு...

First Published May 24, 2018, 1:03 PM IST
Highlights
DMK volunteers - Road blockade


கைது செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் ஏற்றப்பட்ட வாகனம், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில், திமுக தொண்டர்களால் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும்  20 எம்எல்ஏக்கள் சென்றனர். ஆனால், முதலமைச்சரை  சந்திக்க  அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து, ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள், முதலமைச்சர் அறை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த  காவலர்கள் ஸ்டாலினை ன் குண்டுகட்டாக  தூக்கிச் சென்று வெளியேற்றினர்.  இதையடுத்த  அவர்கள்  தலைமை செயலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்  தலைமை செயலகம் வாயிலில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் உள்ளிடோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்டாலினை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸார் அவரை வேனில் ஏற்றினர். 

அவருடன் இருந்த திமுக மூத்த நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். தலைமை செயலகம் முன்பு பல்லாயிரக்கணக்கான திமுகவினர் குவிந்துள்ளதால் ராஜாஜி சாலையே ஸ்தம்பித்துள்ளது. ஸ்டாலின் சென்ற வாகனத்தை நகர விடாமல் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஸ்டாலின் சென்னை, ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்க கொண்டு செல்லபடுகிறார். ரிசர்வ் வங்கி வழியாக ஸ்டாலின் கொண்டு செல்லப்படுகிறார். இந்த நிலையில் ஸ்டாலினை விடுவிக்கக்கோரி திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டாலின் செல்லும் வாகனத்தை தொடர்ந்து தொண்டர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். 

ஸ்டாலின் கொண்டு செல்லப்பட்ட வாகனம் திமுக தொண்டர்களால் வழி மறிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி பாலத்தில் போலீஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைக்கு நடுவே வாகனத்தை தொண்டர்கள் மீண்டும் நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

click me!