ஸ்டாலின் திடீர் போராட்டம்...! போலீசாரால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட ஸ்டாலின்...!

First Published May 24, 2018, 12:22 PM IST
Highlights
MK Stalin sudden struggle


தலைமை செயலகத்தில் முதலமைச்ச்ர அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், போலீசாரால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்தன. இதன் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரையும், எஸ்பி-யையும் பணியிட மாற்றம் செய்துள்ளது அரசின் கண்துடைப்பு நடவடிக்கை என்றார். துப்பாக்கி சூட்டை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டம் கொந்தளிப்பாக உள்ளது.  பலர் உயிரிழந்துள்ளனர். சாதாரண உடையில், பயிற்சி பெற்றவர்கள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றார். 

இதையடுத்து மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள், திமுக தொண்டர்கள் என ஏராளமானோர் தர்ணா போராட்டத்தல் ஈடுபட்டனர். 

தூத்துக்குடியி 13 பேர் கொல்லப்பட்டதற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாயை சந்திக்க அனுமதி கேட்டும் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மு.க.ஸ்டாலினை, போலீசார், குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.

click me!