ஆளுங்கட்சியின் டார்ச்சர் தாங்க முடியாமல் வெலவெலத்துப் போன வேலுமணி.. திமுகவை திணறடிக்க அதிரடி முடிவு.!

Published : Feb 15, 2022, 06:37 AM IST
ஆளுங்கட்சியின் டார்ச்சர் தாங்க முடியாமல் வெலவெலத்துப் போன வேலுமணி.. திமுகவை திணறடிக்க அதிரடி முடிவு.!

சுருக்கம்

சென்னை, கரூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ரவுடிகளை கொண்டு வந்துள்ளனர். சிறையில் இருந்து நிறைய பேரை விடுவித்துள்ளனர். இவர்களையெல்லாம், கோவைக்கு கொண்டு வந்து, ஒவ்வொரு வார்டுக்கும் ஆட்களை நியமித்து இங்கிருக்கும், பொதுமக்கள், மாற்றுக்கட்சியினரை தாக்குகின்றனர். 

காவல்துறை ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு, அதிமுக தொண்டர்களை மிரட்டுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு திமுகவினர்  ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை விநியோகம் செய்து வந்தனர். இதனை கண்டித்து அதிமுக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் உட்பட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோவை மாவட்ட ஆட்சியர்,   மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி;- திமுகவைச் சேர்ந்தவர்கள் கோவையை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கின்றனர். சென்னை, கரூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ரவுடிகளை கொண்டு வந்துள்ளனர். சிறையில் இருந்து நிறைய பேரை விடுவித்துள்ளனர். இவர்களையெல்லாம், கோவைக்கு கொண்டு வந்து, ஒவ்வொரு வார்டுக்கும் ஆட்களை நியமித்து இங்கிருக்கும், பொதுமக்கள், மாற்றுக்கட்சியினரை தாக்குகின்றனர். தேர்தல் விதிகளை மீறி, 150 கண்டெய்னர்களில் பரிசுப் பொருட்களை கொண்டு வந்து, வெளிப்படையாக எல்லா இடத்திலும் விநியோகிக்கின்றனர். கோவை மாவட்டம் எப்போதும் அமைதியானது. 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த, பிரச்சினைகள் எல்லாம் முடிந்து தற்போது அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.

இதை கெடுக்கும் வகையில், வெளியூர்களில் இருந்து வந்த ஆட்கள், இங்குள்ள மக்களையும், மாற்றுக் கட்சியினரையும் தாக்கி மோசமான சூழலை உருவாக்குகின்றனர். திமுக அரசு இதுபோன்ற மோசமான செயலை செய்கிறது. நீதிமன்றத்தின் தேர்தல் வழிமுறைகளை மீறி திமுகவினர் செயல்படுகின்றனர். காவல்துறையினர் திமுகவினருக்கு உடந்தையாக இருக்கின்றனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை திமுகவினர் விநியோகிக்க காவல்துறையினரே உதவுகின்றனர். 

இங்குள்ள வெளியூரைச் சேர்ந்த ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். அதிமுகவினரை கைது செய்து, ‘டார்ச்சர்’ செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பூத் சிலிப் ஆளுங்கட்சியினர் விநியோகிக்கின்றனர். இதுபோல் செயல்பட்டதால், சென்னையில் ஒரு முறை மாநகராட்சி தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்தது. தற்போது கோவையில் இதைவிட மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!