
வேறொருவர் மனைவியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் அதை தட்டிக்கேட்ட கணவரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்எல்ஏவின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியிலும், அக்காட்சி தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த திருவிடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் அப்பகுதியில் கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயஸ்ரீ மற்றும் இரண்டு மகள்களுடன் அதே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி, கூலி வேலைக்கு சென்றிருந்த குமார் இன்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரின் வீட்டின் வாசலில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அவரது வீட்டின் கதவு தாழிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் என்னானதோ? ஏதானதோ என சந்தேகம் அடைந்த குமார், பலமுறை தன் வீட்டின் கதவை தட்டினார். ஆனால் அவரது மனைவி கதவைத் திறக்கவில்லை, இதனால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே எட்டிப் பார்த்தார். அப்போது முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் தனது மனைவி விஜயஸ்ரீயும் தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்து முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் மனோகரன் வீட்டின் கதவைத் திறந்து வேகமாக வந்து குமாரை தகாத வார்த்தைகளில் பேசியதுடன், அவரை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. தனது கார் டிரைவருடன் சேர்ந்து இங்கே ஏன் வந்தாய் எனக்கேட்டு குமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் மனோகரன்.
பின்னர் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வருவதை கண்ட அவர், அங்கிருந்து தனது காரில் தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த குமார் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் குமார் கூறுகையில், தான் அன்றாடம் கூலி வேலை செய்து வருவதாகவும், தனது மனைவி விஜயஸ்ரீக்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் என்பவருக்கும் பல வருடங்களாக தவறான உறவு இருந்து வந்ததாகவும், தான் வேலைக்கு நாகர்கோவில் சென்று விடும் நிலையில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தனது வீட்டிற்கு வந்து செல்வார் என்றும், சம்பவத்தன்று அவர்கள் தனிமையில் இருக்கும்போதுதான் அதை நேரில் பார்த்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து நாஞ்சில் முருகேசனும் அவரது ஓட்டுனர் மகேஷும் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறினார்.
மேலும் தனக்கு முன்னாள் எம்எல்ஏவால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து இரணியல் காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் நாஞ்சில் முருகேசன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் மகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் நாஞ்சில் முருகேசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாஞ்சில் முருகேசன் ஏற்கனவே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று பிணையில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிமுக சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேட்பாளராக தனது மகளை களமிறக்கி, அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் ஒரு பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர் சிக்கி இருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.