பெரியார் திடலில் எங்க அப்பா பணம் இருக்கா இல்லையா.? அலறவிட்ட ராதாரவி.

Published : Feb 14, 2022, 06:28 PM ISTUpdated : Feb 14, 2022, 06:29 PM IST
பெரியார் திடலில் எங்க அப்பா பணம் இருக்கா இல்லையா.? அலறவிட்ட ராதாரவி.

சுருக்கம்

மோடி அவர்களை வைத்துதான் நான் கட்சிக்கே வந்தேன், அவர் செய்த நல்ல நல்ல விஷயங்களை பார்த்து படித்து ஆரம்பத்தில் நான் அவரை எதிர்த்துப் பேசினேன், பிறகு அவர்கள் செய்த நன்மைகளை புரிந்துகொண்டு நன்மை செய்த மனிதரை தவறாக பேசி விட்டோமே என்பதற்காக பாஜகவுக்கு வந்தேன்.

திராவிடத்திற்காக உழைத்த தன் தந்தை எம்.ஆர் ராதாவுக்கு உரிய அதிகாரம் தரப்படவில்லை, பெரியார் திடலில் அவருக்கு ஒரு சிலை வைக்கக் கூட தயங்குகிறார்கள் என நடிகரும் எம்.ஆர் ராதாவின் மகனுமான ராதாரவி கூறியுள்ளார். தனது தந்தையின் பணம் பெரியார் திடலில் இருக்கிறதா இல்லையே என கேள்வி எழுப்பியுள்ள அவர், தனது தந்தைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது ஏன் என்றும் வினவியுள்ளார்.  

சர்ச்சை பேச்சுக்கு புகழ் பெற்றவர் நடிகர் ராதாரவி. எந்த கட்சிக்கு சென்றாலும் சர்ச்சை பேச்சுகளுக்கு மட்டும் பஞ்சம் வைப்பதே இல்லை. திரைப்பட விழா முதல் திருமண விழா வரை அவரின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் நக்கலும் நையாண்டியுமாகவே இருக்கும். நயன்தாராவை பற்றி ஆபாசமாக பேசியதால் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது அவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இங்கேயும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி பஞ்சாயத்துக்களில் மாட்டிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது

அவரது தந்தை நடிகவேள் எம்ஆர் ராதா தமிழக வரலாற்றில் நீடித்த பெயர் பெற்றவர், தந்தை பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி பகுத்தறிவு பரப்பும் வசனங்களை சினிமாவில் பேசி நடித்தது மட்டுமில்லாமல் பெரியாரின் தொண்டராகவே தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்து மறைந்தவர் ஆவார். இன்றும் தந்தை பெரியார் திடலில் நடிகவேள் பெயரில் அரங்கம் இருப்பதே அதற்கு சாட்சி. ஆனால் அவரது மகன் ராதாரவி தந்தையைப் போல அந்த அளவிற்கு சுயமரியாதை கருத்துக்களுக்கு மூடநம்பிக்கை ஒழிப்புக்கு சினிமாவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலும் திரை உலகில் தனக்கென தனி இடத்தை அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தந்தையின் தொடர்ச்சியாக அரசியலில் திராவிட, இயக்கங்களில் இடம் பற்றி எங்கே வந்தார். துவக்கத்தில் திமுகவில் இயங்கிய அவர் வைகோ கட்சியில் இருந்து விலகிய பிறகும் அதிமுகவில் இணைந்தார். கட்சியில் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை என்பதால் மீண்டும் திமுகவிற்கு வந்தார். தனது வீடு ஏலத்திற்கு வந்தப் பிரச்சினையில் கருணாநிதி உதவி  கைவிட்டதால் அதிருப்திக்கு ஆளானார்.

பின்னர் அதிமுகவில் இணைந்து  2002ல் சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். செய்தாலும் கடைசி காலத்தில் மீண்டும் திமுகவில் இணைந்த அவர் நடிகை நயன்தாராவை விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அதனால் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் அதிமுக பக்கம் வந்த அவர்கள் இறுதியாக பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக  தாக்கும் முறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், தனது தந்தை மற்றும் திராவிட பாரம்பரியம் உள்ளிட்டவை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியின் விவரம் பின்வருமாறு :- 

திராவிட சித்தாந்தத்தை தொடர்ந்து பேசி வந்ததால் என் தந்தைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, திராவிடம் திராவிடம் என்று பேசியதால் அவருக்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை, இப்போது வீரமணியின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியார் திடலில் என் தந்தைக்கு சிலை வைக்கக் கூட தயங்குகிறார்கள். அந்த வளாகம் திராவிட கழகத்தினுடையது, அதில் என் தந்தையின் பணம் இருக்கிறதா இல்லையா? அங்கு என் தந்தைக்கு சிலை வைக்க கூட யோசிக்கிறார்கள். என் தந்தை எம்.ஆர் ராதா அவர்கள் இறந்தும் தந்தை பெரியார் அவர்களின்  101 வது பிறந்தநாள் இன்றுதான். முழுக்க முழுக்க பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் என வாழ்ந்த அவருக்கு கூட முறையான அங்கீகாரம் இந்த தி.காவில் கிடைக்கவில்லை. அப்படி என்றால் அது என்ன திராவிடம், ஆனால் இப்போது நான் இருக்கின்ற பாஜக அற்புதமான கட்சி.

மோடி அவர்களை வைத்துதான் நான் கட்சிக்கே வந்தேன், அவர் செய்த நல்ல நல்ல விஷயங்களை பார்த்து படித்து ஆரம்பத்தில் நான் அவரை எதிர்த்துப் பேசினேன், பிறகு அவர்கள் செய்த நன்மைகளை புரிந்துகொண்டு நன்மை செய்த மனிதரை தவறாக பேசி விட்டோமே என்பதற்காக பாஜகவுக்கு வந்தேன். தனது சுயநலத்திற்காக தனது கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக செயல்படுபவர் அல்ல மோடி, இந்தியா வெற்றிபெற வேண்டும் என்பதற்காக உழைப்பவர். அதனால்தான் பாஜகவை தேடி வந்தேன். ராகுல் காந்தி கூட இந்தியா வெற்றி பெறுவதற்காகதான் பேசுகிறார் என்று சொல்கிறார்கள், ஆனால் அதற்கான செயற்பாடுகள் எங்கேயாவது உண்டா? அண்ணல் அம்பேத்கர் பற்றி இதுவரை ஏதாவது சொல்லி இருக்கிறார்களா? அவருக்காக ஏதாவது செய்து இருக்கிறார்களா? அண்ணல் அம்பேத்கரை  அதிக ஈடுபாட்டுடன் சொல்வது பாஜகதான். காங்கிரஸ் அல்ல, சீனாவின் ஊடுருவல் முதலில் எப்படி ஆரம்பித்தது. காரணம் காங்கிரஸ்தான் இவ்வாறு ராதா ரவி கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!