பத்திரம் எழுதி கொடுத்து வாக்கு சேகரிப்பு... பட்டையை கிளப்பும் தூத்துக்குடி பாஜக வேட்பாளர்!!

Published : Feb 14, 2022, 05:49 PM IST
பத்திரம் எழுதி கொடுத்து வாக்கு சேகரிப்பு... பட்டையை கிளப்பும் தூத்துக்குடி பாஜக வேட்பாளர்!!

சுருக்கம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 39 ஆவது வார்டு பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள உஷாதேவி, கமிஷன் வாங்க மாட்டேன் என்று பத்திரத்தில் எழுதி கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 39 ஆவது வார்டு பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள உஷாதேவி, கமிஷன் வாங்க மாட்டேன் என்று பத்திரத்தில் எழுதி கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார். தமிழகத்தில் 21 மநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேருராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி இந்த உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேருராட்சி உறுப்பினர்கள் என 12,820 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருகின்றனர். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிரச்சாரம் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்கும் வகையில் வேட்பாளர்கள் தோசை சுடுவது, டீ போடுவது, காப்பி போடுவது என ஒவ்வொருவரும் தங்களது பகுதிகளில் வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 39 ஆவது வார்டு பகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள உஷாதேவி மேற்கொண்டுள்ள நூதன பரப்புரை மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 20 ரூபாய் பத்திரத்தில் என் மீது எந்த குற்றவழக்குகளும் இல்லை எனவும், கமிஷன் வாங்க மாட்டேன் என்றும் எழுதி வார்டு மக்களுக்கு உஷாதேவி வாக்குறுதி அளித்துள்ளார். இந்த பத்திரத்தை பயன்படுத்தி நீதிமன்றம் வரையில் வழக்குத் தொடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக உஷாதேவி கூறுகையில், 20 ரூபாய் பத்திரத்தில் தன் மீது எவ்வித குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். நான் கவுன்சிலர் ஆன பிறகு ரேஷன் கடைகளில் அனைவருக்கும் அனைத்து பொருட்களும் உரிய முறையில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேன். மக்கள் யாரிடமும் கமிஷன் பெற மாட்டேன், அதோடு தங்கள் வீட்டில் நடைபெறும் கட்டுமான வேலைகள் சம்பந்தமாகவோ அல்லது கழிவுநீர் குடிநீர் சம்பந்தமாகவோ எந்த வேலை வந்தாலும் பணம் பெற மாட்டேன். பொதுமக்களை ஏமாற்றி பணம் தர மாட்டேன் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம், அனைத்து அரசு சேவை அரசாங்க சேவைகள் 24 மணி நேரமும் இலவசமாக செய்து கொடுப்பேன் என உறுதி கூறுகிறேன் என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்