கேசிஆருக்கு அதிர்ச்சி கொடுத்து ஸ்டாலின்... தெலுங்கானா தேர்தலில் யாருக்கு ஆதரவு.? - திமுக அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Nov 21, 2023, 9:38 AM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெறவுள்ள 5 மாநில தேர்தலில்,  தெலுங்கானா மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து திமுக அறிவித்துள்ளது. 
 


தெலுங்கானா தேர்தல் தீவிரம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும்  மிசோரம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலானது நடைபெற்று வருகிறது. இதில் தென மாநிலமான தெலுங்கான மாநிலத்தில் வரும் நவம்பர் 30ஆம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

Latest Videos

undefined

கே.சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக உள்ள பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளை இடையே அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது. 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெறுபவர்கள் ஆட்சி அமைப்பார்கள் அந்த வகையில் கடந்த 10 ஆண்டுக்கு பிறகு தெலுங்கானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. 

காங்கிரசா.? கேசிஆர்ரா.?

இந்தநிலையில் இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் தமிழகத்தில் ஆளும்கட்சியாக உள்ள திமுக யாருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்ற கேள்வியானது எழுந்தது. ஏன் என்றொல் தெலுங்கானா மாநில முதலமைச்சர் கே.சி. சந்திரசேகர் ராவுக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. இந்தநிலையில் கே.சி. சந்திரசேகர் ராவுக்கு ஆதரவளிப்பாரா.? அல்லது இந்தியா கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் கேசிஆருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், திமுக தனது ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. 

திமுக நிலைப்பாடு என்ன.?

இந்த நிலையில் திமுக தலைமை கழகம் சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், வருகிற 2023 நவம்பர் 30 அன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும்,

தெலுங்கானா மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

PMK vs Congress : ராமதாசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றிய தமிழக காங்கிரஸ்- என்ன காரணம் தெரியுமா.?

click me!