தேர்தலில் திமுக சிறு தோல்வியை சந்தித்தாலும் தமிழகத்தில் பாஜக கலூன்ற வாய்ப்பு.. எச்சரிக்கும் ஆ.ராசா.!

By vinoth kumar  |  First Published Feb 12, 2022, 6:59 AM IST

 சிறுபான்மையின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இங்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். திராவிட இயக்கம் இருக்கும் வரை தமிழகத்தில் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் எங்களை பிரிக்க முடியாது. 


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறு தோல்வியை சந்தித்தாலும் பாஜக கலூன்ற வழிவகுத்துவிடும் என திமுக எம்.பி.யும், துணைப் பொதுச்செயலாளருமான ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆ.ராசா அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து, அவர் பேசுகையில்;- சிறுபான்மையின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இங்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். திராவிட இயக்கம் இருக்கும் வரை தமிழகத்தில் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் எங்களை பிரிக்க முடியாது. 

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் கவனித்து வருகின்றனர். திமுக சிறு தோல்வியை சந்தித்தாலும் தமிழகத்தில் பாஜக நுழைவதற்கு சமிக்ஞையாக அமைந்து விடும். நாடாளுமன்ற தேர்தலில் லட்சியத்திற்காக ஓட்டளித்தோம். சட்டப்பேரவை தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக ஓட்டளித்தோம். உள்ளாட்சி தேர்தல் தானே என, தனியாக பிரித்து ஓட்டளித்தால் குழப்பத்தை ஏற்படுத்தும். மோடி அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். திமுக வெற்றி பெற்றால் தான் பாஜக தலைதூக்காது. 

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற போது கொரோனா தீவிரம், வெள்ள பாதிப்பு என இரண்டையும் திறமையாக கையாண்டார். ஆளும்கட்சியான பின் மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்த போதே சிறப்பாக செயல்பட்டார். அதிமுக ஆட்சியில் இருந்த போது கஜானாவை காலி செய்து விட்டுச் சென்றது. பின் ஆட்சிக்கு வந்த திமுக 8 மாதங்களில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. வாக்குறுதியை நிறைவேற்றாத அதிமுகவினருக்கு திமுகவை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது. 

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கைப்பேசி வழங்கப்படும் என தெரிவித்ததை நிறைவேற்றினாரா? இதேபோல, கோவை, திருச்சி, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அவரது வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடா்பாக கேள்வி எழுப்ப எடப்பாடி பழனிசாமிக்கு உரிமையில்லை ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார். 

click me!