கொரோனா பணியில் திமுகவினரை முடுக்கிவிட்ட ஸ்டாலின்..!! பணிகளை வீடியோகாலில் விசாரித்தார்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 30, 2020, 10:52 AM IST
Highlights

எதிர் முனையில் இருக்கும்  சேகர் பாபு. அண்ணா வணக்கம் வணக்கம்...  அரசு சார்பில் பெரிய நடவடிக்கைகள்  இல்லை . ஒருசிலரின் வீடுகளுக்கு வந்து சோதனை செய்கிறார்கள், அதுவும் மீடியா விளம்பரத்திற்காக நடக்கிறது என்கிறார்...

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் மக்களுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், திமுக சார்பில் மக்களுக்கு செய்யப்பட்டு வரும் உதவிகள் குறித்தும் அந்தந்த மாவட்ட மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வீடியோ காலில் கேட்டறிந்துள்ளார் .  அவர் தன் கட்சி பிரதிநிதிகளுடன் வீடியோ காலில் உரையாடியதற்கான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது .  இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே இருக்கிறது இந்நிலையில் தேசிய ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுக்கும் நடவடிக்கைகளை  தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் நோய் தடுப்பு குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் தாண்டி,  திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளும்   மக்களுக்கு  தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் .  இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளிடம் அந்தந்த மாவட்டங்களில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும்,  திமுக செய்யும் உதவிகள்  குறித்தும்  வீடியோ கால் மூலமாக நேரடியாக விசாரித்துள்ளார் .  இந்நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  அதில்,   மு.க ஸ்டாலின் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமாரிடம் இப்படி கேட்கிறார்,   அங்கு பணிகள் எப்படி போய் கொண்டிருக்கிறது..  எதிர் முனையில் பேசும் செந்தில் குமார்,  அண்ணா வணக்கம்...  இங்கு  அரசு சார்பில்  நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் ,   கட்சி சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது... இங்கு தர்கா பகுதியில்  சளிக் காய்ச்சல் அறிகுறியுடன் இருந்த சுமார் 25 பேரை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு  தகவல் கொடுத்து அவர்களை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம்...  தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் தொடர்பில் இருந்து வருகிறேன்... என்கிறார் செந்தில்.   -  தொடர்ந்து மாவட்ட ஆட்சியருடன் தொடர்பில் இருங்கள் என்று அறிவுறுத்தும் ஸ்டாலின் தொடர்பை துண்டிக்கிறார் . 

பின்னர்  சைதை சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர்களில்  ஒருவருமான மா. சுப்ரமணியனை அழைக்கும் ஸ்டாலின்... ,  வணக்கம் சுப்ரமணியம்,  எப்படி போயிட்டு இருக்கு,  என்று கேட்க.  எதிர் முனையில் இருக்கும் மா.சு... அண்ணா வணக்கம்... இங்கு   எல்லாம்  நல்லபடியா போயிட்டு இருக்கு.  இங்கு அரசு சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது... சிறப்பாக நடவடக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்கிறார்.  அதற்கு ஸ்டாலின்...  தூய்மைப் பணியாளர்களுக்கு என்ன உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது என்று அக்கறையுடன் கேட்க ,  அவர்களுக்கு நம் கட்சி சார்பில் தேவையான கையுறைகள் மற்றும் கிருமிநாசினிகள் போன்றவற்றை   வழங்கியுள்ளோம் என பதில் அளிக்கிறார்...  அதற்கு ஸ்டாலின்  சரி பத்திரமாக இருங்கள் என அறிவுறுத்துகிறார்.  

அவரை தொடர்ந்து  மற்றொரு மாவட்ட செயலாளரான சேகர் பாபுவுக்கு போன்போடும் அவர்,  என்ன சேகர் பாபு பணிகள் எப்படி பேய்கிட்டு இருக்கு... வீடுவீடாக வந்து சோதனை செய்வதாக அரசு சொன்னதே  அப்படி நடக்கிறதா என்று கேட்ட... எதிர் முனையில் இருக்கும்  சேகர் பாபு. அண்ணா வணக்கம் வணக்கம்...  அரசு சார்பில் பெரிய நடவடிக்கைகள்  இல்லை . ஒருசிலரின் வீடுகளுக்கு வந்து சோதனை செய்கிறார்கள், அதுவும் மீடியா விளம்பரத்திற்காக நடக்கிறது என்கிறார்...  அப்படியா சரி பார்த்துக்கொள்ளலாம் நீங்கள்  பத்திரமாக இருங்கள் என சேகர் பாபுவை அக்கறையுடன்  எச்சரிக்கிறார் ஸ்டாலின்... இப்படியாக அந்த வீடியோவில்  ஸ்டாலினின் உரையாடல் முடிகிறது...  ஒருபுறம் அரசு மக்களுக்கான சேவையில் இறங்கி இருக்கும் போது எதிர்க்கட்சியான திமுகவும் அதன் தலைவரும் மக்கள் சேவையில் தொண்டர்களை முடுக்கிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது . 
 

click me!