கொரோனாவுக்கு பயந்து தற்கொலை ... யார் தெரியுமா? ஜெர்மன் நிதியமைச்சர்...அதிர்ச்சியில் உலக நாடுகள்..

By Thiraviaraj RMFirst Published Mar 30, 2020, 10:35 AM IST
Highlights

ஒரு நாட்டின் நிதியமைச்சர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பயந்து மன உளைச்சல் காரண்மாக ரயில் தண்டவாளத்தில் கிடக்கும் அளவிற்கு வல்லரசு நாட்டில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது உலகநாட்டு தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

T.Balamurukan

ஜெர்மனியில், மாகாண நிதியமைச்சர் ஒருவர் கொரோனாவினால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுவரைக்கும்,ஜெர்மனியில் கொரோனா வைரஸ்க்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 450 பேர் உயிரிழந்துள்ளனர்.

8 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாகாணத்தின் நிதியமைச்சராக கடந்த 10 ஆண்டுகாலமாக இருந்து வரும் தாமஸ் ஸ்கேஃபர். இவருக்கு வயது 54. இவரது  உடல் பிராங்பேர்ட்டுக்கு அருகிலுள்ள ஹோச்ஹெய்ம் பகுதி ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தாமஸ் ஸ்கேஃபர் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த அம்மாகாண தலைவர் வோல்கர் பூஃபியர் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை எவ்வாறு சரிசெய்யப் போகிறோம் என மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக ஸ்கேஃபர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் நிதியமைச்சர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பயந்து மன உளைச்சல் காரண்மாக ரயில் தண்டவாளத்தில் கிடக்கும் அளவிற்கு வல்லரசு நாட்டில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது உலகநாட்டு தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வோல்கர் பூஃபியர்  வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் 
 
"ஸ்கேஃபர் இழப்பு கடும் அதிர்ச்சியையும், மீளாத் துயரையும் தங்களுக்கு தந்திருப்பதாகவும், கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இரவு, பகல் பாராமல் நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான ஆலோசனைகளை கொடுத்து, தேவையான நடவடிக்கைகளை அவர் எடுத்து வந்தார்.  நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் அவரின் உதவி எங்களுக்கு மிகவும் தேவையாக இருந்த நிலையில் திடீரென அவரின் மரணம் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் இருப்பதாக உணர்ச்சிவசப்பட்ட முறையில் தெரிவித்தார்.என்று பதிவிட்டிருக்கிறார்.

click me!