திமுகவுக்கு ஒரு சீட்டுக்கூட கிடைக்கக் கூடாது... அப்படி இல்லாவிட்டால் விபூதி பூசுவதே போலி... ஹெச்.ராஜா சீற்றம்!

Published : Jan 28, 2021, 09:41 PM IST
திமுகவுக்கு ஒரு சீட்டுக்கூட கிடைக்கக் கூடாது... அப்படி இல்லாவிட்டால் விபூதி பூசுவதே போலி... ஹெச்.ராஜா சீற்றம்!

சுருக்கம்

மு.க. ஸ்டாலினையும் திமுகவையும் ஒரு சீட்டில் கூட வெற்றி பெற விடக் கூடாது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனத்தில் தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச் .ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேசத்துரோகி, ஊழல் பெருச்சாளி ஆ.ராசாவுக்கு என்னைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. 2ஜி வழக்கில் தண்டை பெற்று விரைவில் ஆ.ராசா திஹார் சிறையில் இருப்பார். மு.க. ஸ்டாலினையே வேல் தூக்க வைத்த முருகப் பெருமானின் சக்தி அற்புதம் ஆகும். தமிழகத்தில் முருகனின் புரட்சி ஆரம்பமாகிவிட்டது. 
பக்தர்கள் தைப்பூசத்துக்குப் பழனிக்குச் சென்றால் மட்டும் போதாது. திருநீறு பூசினால் மட்டும் போதாது. முருகனை இழிவுபடுத்தும் கறுப்பர் கூட்டத்துக்கு உதவி செய்யும் மு.க. ஸ்டாலினையும் திமுகவையும் ஒரு சீட்டில் கூட வெற்றி பெறவிடக் கூடாது. இப்படிச் செய்யவில்லை என்றால் பழனிக்குப் போவதோ, திருநீறு பூசுவதோ போலித்தனமாகிவிடும்” என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

EPS vs Stalin: எடப்பாடிக்கு செக் மேட்.! எஸ்.பி.வேலுமணிக்கு ஆஃபர்களை அள்ளி வீசி ரகசிய டீல் போட்ட ஸ்டாலின்.! மொத்தமாக சரியும் கொங்கு கோட்டை?!
Magalir Urimai Thogai: ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!