அதிமுக கூட்டணி தொடரும்.. சசிகலாவை சந்திக்க அழைப்பு வரும்.. நிச்சயம் சந்திப்பேன்.. குழப்பும் கருணாஸ்..!

By vinoth kumarFirst Published Jan 28, 2021, 6:03 PM IST
Highlights

சசிகலாவை சந்திக்க எங்களுக்கு அழைப்பு வரும். நாங்கள் நிச்சயம் மரியாதை நிமித்தமாக சந்திப்பேன் என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் திருவாடாணை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார்.

சசிகலாவை சந்திக்க எங்களுக்கு அழைப்பு வரும். நாங்கள் நிச்சயம் மரியாதை நிமித்தமாக சந்திப்பேன் என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் திருவாடாணை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தேசிய தெய்வீக பிரசாரத்தை நிறுவன தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ.  சூலூர், பள்ளபாளையம், சிந்தாமணி புதூர் பகுதிகளில் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாஸ்;- 1994-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எங்கள் அனைத்து பிரிவுகளையும் சேர்த்து தேவர் இனம் என அரசாணை வெளியிட்டார். அதனை உடனே அமல்படுத்த வேண்டும். 

குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் வேலைவாய்ப்பு, கல்வியில் இடஒதுக்கீடு என கொடுப்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் ஒட்டுமொத்த எங்களை போன்ற சமூக மக்களை அழிப்பதற்கு சமமானது. ஆகவே முதல்வர் இதில் கூடுதல் கவனம் செலுத்தி எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். ஜெயலலிதா வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தி 25 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், சசிகலா மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனையிலிருந்து சென்னை வந்தவுடன் அவர் ஓய்வு எடுப்பார். முதலில் உறவினர்கள் எல்லாம் அவரை சந்திப்பார்கள். எங்களுக்கும் அழைப்பு வரும். நிச்சயமாக அவரை மரியாதை நிமித்தமாக சந்திப்பேன். ஜெயலலிதா தான் எங்களுக்கு அரசியல் அங்கீகாரம் அளித்தவர். அதனால் தற்போதைய அதிமுக அரசின் கூட்டணி தொடரும். முதல்வர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் உள்ளதால் எங்களை அழைக்கவில்லை. எங்களை மட்டுமல்ல மற்ற கூட்டணி கட்சிகளையும் அழைக்கவில்லை. திமுக தலைவருக்கு வேல் பரிசாக கொடுக்கப்பட்டது தவறான விஷயம் அல்ல. விவசாயிகள் டிராக்டர் பேரணியில் மத்திய அரசுதான் சதி செய்து சீர்குலைத்தது என குற்றம்சாட்டியுள்ளார்.

click me!