
திமுக மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பல ஆண்டுகளாக திமுக மாணவர் அணிச் செயலாளராக பணியாற்றி வந்த கடலூர் இள.புகழேந்தி, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாணவர் அணி இணை செயலாளராக இருந்த எழிலரசன், புதிய செயலாளராக நியமமிக்கப்பட்டுள்ளார்.
இதே போன்று திமுக விவசாய அணி இணைச் செயலாளராக நாகை அருட் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் அன்பழகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.