கேவலப்படுத்திய மருமகன்! கண்ணீரை துடைக்கும் ஸ்டாலின்: தி.மு.க.வுல எதுக்கெல்லாம் பதவி கொடுக்காங்கன்னு பாருங்க..!

By Vishnu PriyaFirst Published Feb 9, 2020, 1:59 PM IST
Highlights

காவேரி மருத்துவமனையிலிருந்து அவரது பூத உடல் ஊர்வலமாக கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துவரப்பட்டது. அப்போது வைகோ உள்ளிட்ட சில முக்கிய மனிதர்கள் முன்கூட்டியே கோபாலபுரம் வந்து கருணாநிதி வழக்கமாக அமரும் அறைக்குள் காத்திருந்தனர். அப்போது கருணாநிதியின் நெருங்கிய சொந்தங்களில் ஒருவர் அங்கே வந்து ’யோவ் எல்லாரும் தாத்தா அறையைவிட்டு வெளியே வாங்க’ என்று சத்தம் போட்டிருக்கிறார்

அ.தி.மு.க.வில் மூணு மணி நேரத்துக்கு முன்னாடி இணைந்த தம்மாத்துண்டு உறுப்பினரும் கூட தி.மு.க.வை பார்த்து வைக்கும் மிகப்பெரிய விமர்சனம் ’அது வாரிசு கட்சி. உழைப்பு, நேர்மை, விசுவாசம் இதற்கெல்லாம் மரியாதை கிடையாது. கோபாலபுர குடும்ப வாரிசுகளுக்கு பிடித்துவிட்டால்  உச்சம் தொடலாம். பிடிக்காவிட்டால் மிச்சம் மீதி லெவலுக்கு குப்பையில் வீசிவிடுவார்கள்!’ என்பதுதான்.  இந்த விமர்சனத்தை ஸ்டாலின் உள்ளிட்டோர் வெளியே மறுத்துப் பேசினாலும் கூட,  தி.மு.க.வினுள் நடக்கும் நிகழ்வுகள் என்னவோ இந்த விமர்சனத்தை வடிகட்டிய உண்மை! என்றே சுட்டிக் காட்டுகிறது. கட்சியில் வெறும் உறுப்பினராக இருந்த உதயநிதி ஸ்டாலின் சட்டென இளைஞரணியின் மாநில செயலாளர் ஆக்கப்பட்டது! ஸ்டாலினின் நண்பரின் மகனான மகேஷுக்கு எம்.எல்.ஏ. வாய்ப்பு,  திருச்சி மாவட்டத்தின் ஒரு முக்கிய பதவிக்கு பொறுப்பாளர் பதவி என்பது உட்பட பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 
அந்த வகையில் இப்போது இன்னொரு விஷயமும் இதில் இணைந்திருக்கிறது. அதாவது வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. இதில் தி.மு.க. சார்பில் மூவர் நிரப்பப்பட இருக்கிறார்கள். அந்த வகையில் இப்போது எம்.பி.யாக இருக்கும் திருச்சி சிவாவுக்கு மீண்டும் அந்த வாய்ப்பு வருகிறது! என்கிறார்கள். ’ பல வருடங்களாக ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து சிவா அப்படி என்னதான் சாதித்துவிட்டார்? ஒருவேளை பெரிதாய் சாதித்திருந்தாலும் கூட இனி அவரை மாநில அரசியலுக்கு வந்து கட்சிக்காக தமிழகத்தில் சாதிக்க சொல்லுங்கள். சசிகலா புஷ்பாவால் பொதுவெளியில் தாக்கப்படும் அளவுக்கு சென்று கட்சியை அசிங்கப்படுத்திய மனுஷனை இன்னும் எத்தனை காலத்துக்கு எம்.பி.யாக்கி கொண்டிருப்பீர்கள்?’ என்று கட்சிக்குள்ளிருந்தே பெரும் கூச்சல் கிளம்பியிருக்கிறது. ஆனால் இதை காதிலேயே போட்டுக் கொள்ளாத ஸ்டாலின், இன்னொரு ராஜ்யசபா எம்.பி.யாக மாஜி அமைச்சரும், செம்ம சீனியருமான ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறாராம். ’ரொம்ப நாளா கட்சிப்பணியிலேயே இல்லாம ஒதுங்கிக் கிடந்த இவருக்கு ஏன் திடீர்னு எம்.பி. பதவி?’ என்று சிலர் கேட்க, அதற்கு அறிவாலயத்திலிருந்து கிசுகிசுக்கப்படும் பதில்தான் ஹைலைட்....


அதாவது கருணாநிதி இறந்ததும், காவேரி மருத்துவமனையிலிருந்து அவரது பூத உடல் ஊர்வலமாக கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துவரப்பட்டது. அப்போது வைகோ உள்ளிட்ட சில முக்கிய மனிதர்கள் முன்கூட்டியே கோபாலபுரம் வந்து கருணாநிதி வழக்கமாக அமரும் அறைக்குள் காத்திருந்தனர். அப்போது கருணாநிதியின் நெருங்கிய சொந்தங்களில் ஒருவர் அங்கே வந்து ’யோவ் எல்லாரும் தாத்தா அறையைவிட்டு வெளியே வாங்க’ என்று சத்தம் போட்டிருக்கிறார். எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி, கலவரமாக அவர்கள் வைகோவை பார்க்க, தான் இருப்பது தெரியாமல்தான் பேசுகிறார்! என்று சமாதானம் சொல்லியபடியே வைகோ கீழே வாசலுக்கு வந்து நின்றுவிட்டார். ஆனால் மாஜி அமைச்சர் ஒருவர் மட்டும் வெளியே வராமல், கருணாநிதியின் அறைக்குள்ளே ஒதுங்கி ஒண்டி நின்றிருக்கிறார். அவரை கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர், சீனியர் மோஸ்ட் மனிதர் என்றெல்லாம் பாராமல் கேவலமாக திட்டி வெளியே அனுப்பினாராம் அந்த குடும்ப நபர். அவர் ஸ்டாலினுக்கு மருமகன் முறையாகும் நபராம்.  எல்லாருக்கும் அவர் மீது கடும் கோபம். ஆனால் தலைவர் இறந்து, கொண்டு வரப்படும் நிலையில் அவரது வீட்டிற்குள்ளேயே இதை தட்டிக் கேட்க யாருக்கும் துணிவில்லை. ஆனால் முக்கிய நிர்வாகிகள் இதை பார்த்து வைத்துவிட்டு, சில மாதங்களுக்கு முன் ஸ்டாலினிடம் விளக்கி  இருக்கின்றனர். கூடவே ‘இந்த சம்பவத்துக்கு பிறகு அவரு (மாஜி) கோபாலபுரம் பக்கமே வர்றதில்லை. உங்களையும் பெருசா சந்திக்கிறதில்லை. மனசு ரொம்பவே உடைஞ்சுட்டார்.’ என்று  குறிப்பிட்டுள்ளனர். 


உடனே அவரை போனில் அழைத்து பேசிய ஸ்டாலின் ’மனசுல எதையும் வெச்சுக்காதீங்க உங்களுக்கு சரியான மரியாதையை நான் செய்வேன்!’ என்றாராம். சொன்னபடியே இப்போது ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு அவரை டிக் செய்துள்ளார். இவருக்கு ஏன் தலைவரே இப்ப இந்த பதவி? என்று முக்கிய நிர்வாகிகள் கேட்டதற்கு ’மைனாரிட்டி மக்களின் பிரதிநிதிகளுக்கு தி.மு.க. கைகொடுக்காமல் வேற யார் கை கொடுப்பாங்க?’ என்று கேட்டு சமாளித்திருக்கிறார். ஆனால் ஸ்டாலினின் வலது இடது கரங்களுக்கு நன்றாகவே தெரியும், ‘மருமகன் அசிங்கப்படுத்த, தளபதியோ அந்த கண்ணீரை துடைக்கிறார்’ என்று. ஹும்! கேவலப்பட்டாலும் அது கடைசியில ஆதாயத்துலதான் முடியுது அரசியல்ல. 

click me!