டி.எம்.கே-வுக்கு இப்படியொரு விளக்கமா..? துரைமுருகனை ஒரே அடியாக சாய்த்த உதயநிதி..!

Published : Jul 30, 2019, 03:58 PM IST
டி.எம்.கே-வுக்கு இப்படியொரு விளக்கமா..? துரைமுருகனை ஒரே அடியாக சாய்த்த உதயநிதி..!

சுருக்கம்

திமுகவுக்கு முற்றிலும் புதிய விளக்கம் கொடுத்துள்ளார் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.  

திமுகவுக்கு முற்றிலும் புதிய விளக்கம் கொடுத்துள்ளார் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.  

திமுக இளைஞர் அணிச் செயலாளராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இரண்டாவது நாளாக கழக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். 


பிரசாரத்தின்போது உதயநிதி, “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு நன்றி. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியைத் தந்ததற்கு மிக்க நன்றி. மக்களவைத் தேர்தலின்போது தமிழகம் முழுக்க நான் திமுகவுக்காக சார்பில் பிரசாரம் செய்தேன். அப்போது வேலூர் தொகுதியில் இருந்துதான் நான் முதன்முதலாக பிரசாரத்தைத் தொடங்கினேன். இப்போது கட்சியின் இளைஞரணிச் செயலாளராக பதவியேற்ற பின்னர் நான் பங்கேற்கும் முதல் பிரசாரக் கூட்டமும் இதுவே. 

டி.எம்.கே என்றால் திராவிட முன்னேற்றக் கழகம். டி.எம்.கே என்றால் துரை முருகன் கதிர்ஆனந்த் என்றும் கூறலாம். அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று வாக்கு சேகரித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!
ஆளுநரின் தேநீர் விருந்து.. ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!