
திமுக ஆட்சிக்கு வந்ததலிருந்து ஒருபக்கம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகள் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் மகளிருக்கு பாதுகாப்பில்லாத வகையில் இத்தகைய பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இளம்பெண் கூட்டு பலாத்காரம்
விருதுநகர் மாவட்டத்தில் தனியார் ரெடிமெட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயதான இளம்பெண்ணை ஹரிஹரன்(27), திமுக இளைஞரணி வார்டு அமைப்பாளருமான ஜூனத் அகமது (27), முத்தால் நகரைச் சேர்ந்த மாடசாமி, ரோசல்பட்டியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் என 8 பேரும் கடந்த 6 மாதங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர்.
இதையும் படிங்க;- உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்.. திமுக நிர்வாகி உள்பட 8 கைது.!
இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரின்படி, கடந்த 21ம் தேதி ஹரிஹரன், ஜூனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 4 பள்ளி மாணவர்களும் சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தர முதல்வர் உத்தவிட்டுள்ளார். இந்நிலையில், விருதுநகர் பாலியல் வழக்கில் வேறு யாராவது இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மகளிருக்கு பாதுகாப்பில்லை
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விருதுநகர் பாலியல் வன்கொடுமை நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதில் தொடர்புடைய அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததலிருந்து ஒருபக்கம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகள் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் மகளிருக்கு பாதுகாப்பில்லாத வகையில் இத்தகைய பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க;- நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் நம்பிக்கை துரோகம் செய்யும் திமுக அரசு.. அம்பலப்படுத்தும் டிடிவி.தினகரன்.!
முழுமையான விசாரணை தேவை
அதிலும் ஆளுங்கட்சியினர் இதில் தொடர்புடையவர்களாக இருப்பதால் விசாரணையில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது. வேறு யாராவது இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். விருதுநகர் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய மற்றவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.