நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்களின் இன்னல்களை போக்குங்க.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு

By vinoth kumarFirst Published Nov 7, 2021, 12:42 PM IST
Highlights

வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன்.

திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் கடந்த 2015ம் ஆண்டிற்கு பிறகு நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால், வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், புரசைவாக்கம், பெரம்பூர், ரெட்டேரி உள்ளிட்ட பாகுதிகளில் மழையின் பாதிப்புகள் குறித்து முதல்வர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். மின்சார விநியோகம், மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் மேலாண்மை  குறித்து அதிகாரிகளிடம்  கேட்டறிந்தார். பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்  என்று அங்கிருந்த பொது மக்களுக்கு ஆறுதல் அளித்தார்.  இதனையடுத்து, திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே செய்திட உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக  திமுக தலைவரும், முதல்வர் ஸ்டாலினும் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன்.

அமைச்சர் பெருமக்களும் இதுபோன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கழக நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக அனைத்து நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி - மக்களின் இன்னல்களைப் போக்கிட தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

click me!