கெத்து காட்டும் முதல்வர்.. கன மழையையும் பொருட்படுத்தாமல் ஆய்வு பணியில் இறங்கிய ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Nov 7, 2021, 11:32 AM IST
Highlights

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக, வருகின்ற 9-ம் தேதி அன்று  வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

சென்னையில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வடசென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக, வருகின்ற 9-ம் தேதி அன்று  வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. இதனால்,சென்னையில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 டிரான்ஸ்பார்மர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும், மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று  மின்வாரிய அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில், விடிய விடிய பெய்த கனமழையால் வடசென்னை பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சீரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில், அடை மழையையும் பொருட்படுத்தாமல் வெள்ளம் அதிகம் சூழ்ந்துள்ள பகுதிகளான எழும்பூர், ஓட்டேரி, பாடி, ஜவகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். 

click me!