பாடுபட்டு குத்தினாலும் பதர், அரிசியாகாது... என்ன கத்தினாலும் திமுக ஆட்சிக்கு வராது! அமைச்சர் விமர்சனம்!

By vinoth kumarFirst Published Sep 19, 2018, 4:21 PM IST
Highlights

பாடுபட்டு குத்தினாலும் பதர், அரிசியாகாது என்றும் என்ன கத்தினாலும் திமுக ஆட்சிக்கு வராது என்றும் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பாடுபட்டு குத்தினாலும் பதர், அரிசியாகாது என்றும் என்ன கத்தினாலும் திமுக ஆட்சிக்கு வராது என்றும் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அதிமுக ஆட்சியை அகற்றும்வரை தொடர்ந்து போராடுவோம் என்று கூறி வருகிறார். 

அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்களை ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். ஊழலில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். இந்த நிலையில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், என்ன கத்தினாலும், திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று கூறியுள்ளா. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார்.

 

பாடுபட்டு குத்தினாலும் பதர் அரிசியாவது இல்லை. அதுபோல் என்ன கத்தினாலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. இதுதான் நிதர்சனமான 
உண்மை தமிழகத்தில் தீவிரவாதம், மதவாதம், மொழிவாதம் தலைதூக்க விடமாட்டோம். தமிழக மக்களுக்கு யார் மதவாதிகள் என தெரியும். 

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

click me!