குடியுரிமை சட்டத்திருத்த மசோதா… கடுமையாக எதிர்க்கும் ஸ்டாலின் !! திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

Selvanayagam P   | others
Published : Dec 12, 2019, 11:40 PM ISTUpdated : Dec 12, 2019, 11:41 PM IST
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா… கடுமையாக எதிர்க்கும் ஸ்டாலின் !!  திமுக  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

சுருக்கம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் 17-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்திய குடியுரிமை சட்ட மசோதா  கடந்த திங்கட்கிழமை மக்களவையில் நிறைவெற்றப்பட்டது. இதையடுத்து அந்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் 17 ஆம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மாவட்டந்தோறும் வரும் 17ம் தேதி திமுக சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த பாஜக - அதிமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மூலம்  அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை, சம உரிமை போன்றவை தகர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சீட்டு வாங்கி கொடுத்த ஓபிஎஸ்க்கு ஆப்பு வைத்த எம்பி தர்மர்..! மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்..
பாஜக அரசுக்கு ஆதரவு... என் முடிவில் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. காங்கிரஸ் கட்சிக்கு சசி தரூர் பதிலடி..!