குடியுரிமை சட்டத்தை கேரள மாநிலம் ஏற்காது... பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பு!

By Asianet TamilFirst Published Dec 12, 2019, 10:10 PM IST
Highlights

இந்தக் குடியுரிமை சட்டத்துக்கு வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடகிழக்கு மா நிலங்களில் போராட்டாங்களும் சூடுபிடித்துள்ளன. பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதேபோல காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்  இந்த சட்டத் திருத்த மசோதாவை கேரள ஏற்காது என  மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 
 
குடியுரிமை சட்டத்தை கேரள மாநிலம் ஏற்காது என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தில் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. ஆனால், முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு மட்டும் குடியுரிமை வழங்க இந்தச் சட்ட மசோதா வழிவகை செய்கிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இச்சட்டம், அவருடைய ஒப்புதலுக்கு பிறகு சட்டமாகும்.

இந்தக் குடியுரிமை சட்டத்துக்கு வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடகிழக்கு மா நிலங்களில் போராட்டாங்களும் சூடுபிடித்துள்ளன. பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதேபோல காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்  இந்த சட்டத் திருத்த மசோதாவை கேரள ஏற்காது என  மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். “குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது. மத அடிப்படையில் இந்தியாவைப் பிரிப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது இந்தியாவின் சமத்துவம், மதச்சார்பின்மையை நாசப்படுத்தும் செயல். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கேரள மாநிலம் ஏற்காது” என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

click me!