ஐ-பேக் போட்டு கொடுத்த ஐடியா... பிரதமர் மோடி வழியைப் பின்பற்ற முடிவெடுத்த மு,க. ஸ்டாலின்..!

By Asianet TamilFirst Published Feb 25, 2021, 9:22 AM IST
Highlights

மேடைகளில் வாய்த்தவறி பேசுவதை தவிர்க்கும்பொருட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பிராம்ப்டர் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.   
 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் துண்டுச்சீட்டுகளை வைத்து பேசுவதாக சமூக ஊடங்களில் எதிர்க்கட்சியினர் கிண்டலடிப்பது வாடிக்கை. மேலும் அவர் பேசும்போது, வாய்த் தவறி பேசும் வார்த்தைகளை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சிகள் கேலியும் கிண்டலும் செய்துவருகின்றன. தற்போது தேர்தல் நேரம் என்பதால், ஸ்டாலின் வாய்த் தவறி பேசுவதை எடுத்து, அதை வீடியோவாக இணையத்தில் வைரலாக்க எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.
இந்த தர்ம சங்கடத்தை தவிர்க்கும் பொருட்டு, மு.க. ஸ்டாலின் எளிமையாகவும் துல்லியமாகவும் பேசும் வகையிலும் பிராம்டர் மூலம் மேடையில் பேசும்படி ஐ-பேக் நிறுவனம் மு.க. ஸ்டாலினுக்கு ஐடியா கொடுத்தது. அதை ஏற்று தற்போது ‘உங்கள் தொகுதியில் மு.க. ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஸ்டாலின் பேசும் மைக் செட்டுக்கு முன்பாக இரு புறங்களிலும் பிராம்ப்டர் வைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை செய்யத் தொடங்கியிருக்கிறார். 
பிராம்டரில் ஓடும் எழுத்துகளைப் பார்த்து படிக்கும்போது, மேடைக்கு முன்பாக இருப்பவர்களுக்கு மு.க. ஸ்டாலின் இயல்பாகப் பேசுவதுபோலவே இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டங்கள் மற்றும் முக்கிய கூட்டங்களில் ஆங்கிலத்தில் பேசும்போது பிராம்ப்டர் கருவியைத்தான் பயன்படுத்துகிறார். தற்போது அவருடைய பாணியில் மு.க. ஸ்டாலினும் பிராம்ப்டர் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். 
 

click me!