எல்லாவற்றையும் போல இதிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா? போட்டு தாக்கும் டிடிவி.தினகரன்..!

Published : Mar 05, 2022, 01:57 PM IST
எல்லாவற்றையும் போல இதிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா? போட்டு தாக்கும் டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தமாட்டோம் என்று கூறி வந்த திமுக அரசு, தற்போது அந்தக் கல்விக் கொள்கைப்படி 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் செய்திருப்பது ஏன்?

புதிய கல்விக் கொள்கை குறித்த திமுக அரசின் நிலைபாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு அட்டவணையில் தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு மட்டுமின்றி மற்ற மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனியாக ஒரு தொழிற்கல்வி பாடத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் இத்தேர்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருக்கின்றனர். இந்நிலையில், எல்லாவற்றையும் போல இதிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தமாட்டோம் என்று கூறி வந்த திமுக அரசு, தற்போது அந்தக் கல்விக் கொள்கைப்படி 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் செய்திருப்பது ஏன்?

எல்லாவற்றையும் போல இதிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா? மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய இப்பிரச்சினையில், நீட் தேர்வு விவகாரத்தைப் போல திமுக அரசு நாடகமாடக்கூடாது. புதிய கல்விக் கொள்கை குறித்த திமுக அரசின் நிலைபாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!