ஆளுநரை மாற்றக் கோரி போஸ்டர் ஒட்டி தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகியால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jun 28, 2023, 4:10 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றக்கோரி மதுரையில் திமுக நிர்வாக கலைஞர் கருணாநிதி சிலை முன்பாக தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி தமிழக அரசின் பல்வேறு விவகாரங்களில் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் வகையில் பேசிவருகிறார். இந்நிலையில் மதுரை மானகிரி பகுதியை சேர்ந்த ஆவின் திமுக தொழிற்சங்க தலைவரான கணேசன் என்பவர் தமிழக ஆளுநராக இருந்து வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார். எனவே 27ம் தேதிக்குள் ஒன்றிய அரசு தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும். 

Tap to resize

Latest Videos

undefined

அவ்வாறு மாற்றாவிட்டால் 28ம் தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கு குளித்து சாவேன் என போஸ்டர் ஒட்டியிருந்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தீக்குளிக்க வருவதாக அறிவித்திருந்த நிலையில் காலை முதலே காவல்துறையினர் தீக்குளிப்பதை தடுப்பதற்காக காத்திருந்தனர். அப்போது திடிரென 10.30 மணிக்கு கருணாநிதி சிலை முன்பாக காரில் வந்து இறங்கிய கணேசன் திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

தண்ணீர் வசதி கூட இல்லை; எம்எல்ஏவை மண்டபத்திற்குள் வைத்து பூட்டு போட்ட கிராம மக்கள்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றி குளிக்க வைத்த பின்பு கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது பேசிய கணேசன் சிறப்பாக செயல்படக்கூடிய திமுக அரசை இடையூறு செய்யும் வகையில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார் எனவே அவரை மாற்ற வேண்டும் எனவும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து தலைமையிடம் கேட்டு முடிவு எடுப்பேன் தெரிவித்தார்.

வளையோசை கல கல வென - மேடையில் பாடல் பாடி அசத்திய எம்.எல்.ஏ செந்தில்குமார்

click me!