மோடி என்ன பண்றாருனு அவருக்கே தெரியாது... ஆனால் திமுக இரு தேர்தல்களையும் சந்திக்க தயார் - துரைமுருகன்

By Velmurugan s  |  First Published Sep 5, 2023, 12:01 PM IST

பிரதமர் மோடி என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியாது என்று விமர்சித்துள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் சேர்ந்து வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மோடி என்ன செய்கிறார் என தெரியவில்லை சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளது சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலை சேர்த்தே நடத்துவாரா என தெரியவில்லை வந்தாலும் தேர்தலை சந்திக்க திமுகவினர் தாயாராக இருக்க வேண்டும் தொகுதி கூட்டங்களை இப்போதே துவங்கிவிட வேண்டும் வேலூரில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேச்சு 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 17ம் தேதி வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள திமுக பவள விழா, கலைஞர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாக்களில் கலந்து கொள்ள உள்ளார். இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த கூட்டத்தில்  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  பேசுகையில், மோடி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அவர் ஆட்சியை நடத்தப் போகிறாரா  அல்லது  அமெரிக்காவைப் போல்  ஜனாதிபதி அரசாங்கம் கொண்டுவர போகிறாரா அல்லது தேர்தலை முன்கூட்டியே கொண்டு வருகிறார்  அல்லது தள்ளி வைக்கிறார்  என்னவென்று தெரியவில்லை. திடீரென கூட்டத்தைக் கூட்டி உள்ளார். 

தமிழகத்தின் மாண்பு சந்தி சிரிக்கிறது; உதயநிதி தமிழகத்தின் பப்புவாக இருக்கிறார் - அண்ணாமலை விமர்சனம்

ஆனால் ஒன்று மற்றும் நன்றாக தெரிகிறது. தேர்தல் விரைவில் வர இருக்கிறது. சட்டமன்றமும், பாராளுமன்றமும் சேர்ந்து வருமா  என்பது தெரியவில்லை.  ஆனால் நாம்  சட்டமன்ற தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் சேர்ந்தே வருவதாக நினைத்து பணியாற்ற வேண்டும். இந்த விழாக்கள் முடிவதற்கு முன்னால் நிலைமைகளை அறிந்து அதை செய்ய வேண்டும். எனவே தேர்தல் வருகிறது  என வழியில் போகும்போது உஷாரா கையில் கம்பெடுத்துபோவது போல் செல்ல வேண்டும்  என பேசினார்.

பின்னர் அமைச்சர்   துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பவள விழா, கலைஞர் நூற்றாண்டு விழா உள்ளிட்டவைகள் முப்பெரும் விழாவாக வேலூரில் நடத்த வேண்டும் என  தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  நாங்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். மாநாடுகளை நடத்துவதிலும், ஊர்வலம் நடத்துவதிலும் என்றைக்கும் வேலூர் மாவட்டம்  சளைத்து போனதும் இல்லை, சலித்து போனதும் இல்லை. 

உடுமலை அருகே வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் ஒற்றை காட்டு யானை

ஒரே நாடு ஒரே  தேர்தல்  என்பதற்காக கூட்டத்தைக் கூட்டி உள்ளதாக கூறுகிறார்கள். அவ்வாறு கூட்டினால், அவ்வாறு செய்தால் அதில் சட்ட சிக்கல்கள் உண்டு. எப்போது என்ன செய்யப் போகிறார்கள் என ஒன்றும் தெரியவில்லை. ஒரு புரியாத புதிராக உள்ளது. அதிமுக ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்க காரணம்  அவர்கள் எப்போதும் பாஜகவோடு கூட்டணி செல்கிறார்கள். 

மேகதாதுவில் தண்ணீர் திறப்பது கர்நாடகா தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ளது. நாங்களும் சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளோம். வழக்கு ஆறாம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

click me!