திடீரென ஜெகன் மோகனை சந்தித்த திமுக எம்.பி... என்ன சொல்லி அனுப்பினார் ஸ்டாலின்..??

By Ezhilarasan BabuFirst Published Oct 13, 2021, 12:24 PM IST
Highlights

இந்நிலையில், நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும், அதனை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடந்த 4ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கிய கடிதத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் வழங்கி ஆதரவு கோரினார். நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்றும், அது கிராம்புற ஏழை எளிய மக்களுக்கு எதிரானது என்றும், தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அதற்கான குரல் தீவிரமடைந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைத்து நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கையாக தயாரித்து அது மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:  கோட் சூட்டுடன் ஹாலிவுட் ஹீரோபோல வந்த நம்ம ஆளுநரா இது..? கெத்தா வேட்டி சட்டையில் கலக்கும் மாஸ் புகைப்படம்.

இந்நிலையில், நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும், அதனை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடந்த 4ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் தமிழக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம்-2021 என்ற சட்ட முன்வடிவு உள்ளிட்ட நீட் ரத்து குறித்து தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும், கூட்டணி குறித்தும், ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையின் நகல் ஆகியவற்றை, மொழிபெயர்த்து பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று வழங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: தமிழர்களின் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு சமஸ்கிருத மந்திர பூமிபூஜை எதற்கு.. தமுஎகச கண்டனம்

தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு கோரப்பட்டு வருகிறது, இந்நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து தமிழக முதலமைச்சரின் கடிதம் மற்றும் ஏ.கே ராஜனின் அறிக்கையை மொழிபெயர்ப்பு நகல் ஆகியவற்றை வழங்கி ஆதரவு கோரியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிகேஎஸ் இளங்கோவன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து கோரிக்கை கடிதத்தை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!