நாங்க எங்கே தோற்றோம்..? மீசையை முறுக்கும் சீமான்..!

Published : Oct 13, 2021, 12:07 PM IST
நாங்க எங்கே தோற்றோம்..? மீசையை முறுக்கும் சீமான்..!

சுருக்கம்

சாட்டை துரைமுருகன் சாட்டையை அடிக்கடி வீசிவிடுவதால் பலருக்கு வலிக்கிறது. அதனால் கைது செய்யப்பட்டுள்ளார்

உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி வெற்றிபெற்றுள்ளது, படுதோல்வி அடையவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இந்நிலையில் பல இடங்களில் தோல்வி அடைந்து சில இடங்களில் டெபாசிட் இழந்துள்ளதாக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான் "அதிமுக, திமுக ஆகியவை முதலில் தனித்து போட்டியிட்டு தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளதோ அவர்களுக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். தேர்தலில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி வெற்றிபெற்றுள்ளது, படுதோல்வி அடையவில்லை. வளரும் கட்சி படிப்படியாகத்தான் வளரும், இன்று இல்லை என்றால் நாளை வெல்வோம். 

சாட்டை துரைமுருகன் சாட்டையை அடிக்கடி வீசிவிடுவதால் பலருக்கு வலிக்கிறது. அதனால் கைது செய்யப்பட்டுள்ளார், சாட்டை துரைமுருகனை கைது செய்யும் போலீஸ், ஹெச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!