நேற்று அண்ணாமலை.. இன்று முதல்வர் ஸ்டாலின்.. ஆளுநரை சந்திப்பதன் பின்னணி என்ன?

By vinoth kumarFirst Published Oct 13, 2021, 12:06 PM IST
Highlights

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை தமிழக அரசு தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வால் ஏழை, எளிய, கிராம புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பது சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும், நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ஆளுநரை சந்தித்த நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க உள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை தமிழக அரசு தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வால் ஏழை, எளிய, கிராம புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பது சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும், நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்திருந்தது. 

இந்த சூழலில் பட்ஜெட் கூட்டத் தொடரில், நீர் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க முடியும். ஆனால்,  நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் ஒப்புதல் கிடைக்காத நிலை இருந்து வருகின்றது.  

இந்நிலையில், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கிறார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஆளுநரை சந்தித்து வலிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் ஆளுநரை சந்தித்து திமுக எம்.பி.களுக்கு எதிரான வழக்கு, தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளைக் கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் திமுக எம்.பி.க்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!