கோட் சூட்டுடன் ஹாலிவுட் ஹீரோபோல வந்த நம்ம ஆளுநரா இது..? கெத்தா வேட்டி சட்டையில் கலக்கும் மாஸ் புகைப்படம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 13, 2021, 11:49 AM IST
Highlights

அவர் ஆளுநராக பொறுப்பேற்றது முதல் பாஜகவினர் அவருக்கு மிகுந்த வரவேற்ப்பையும், ஆதரவையும் வழங்கி வருகின்றது. இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அவரிடம் புகார் மனு வழங்கினர். 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களிடம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பளபளக்கும் வெள்ளைநிற வேட்டி சட்டையில் புகார் மனு பெற்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்துக்கு வரும்போது கெத்தாக கோட்டு சூட்டுடன் வந்த ஆளுநர், தற்பொது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டைக்கு மாறியிருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை எந்த ஆளுநரும் சந்திக்காத அளவுக்கு கடுமையான சர்ச்சைகளுக்கும் விமர்சனத்திற்கும் மத்தியில் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ளவர் ஆர்.என் ரவி. 

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.அவர் ஆளுநராக அறிவிக்கப்பட்ட உடனேயே, தமிழக அரசியல்  கட்சிகள் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. தமிழக  அரசுக்கு இடையூறு கொடுக்கும் நோக்கத்தில்தான் அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் நியமனத்திற்கு பல மறைமுக காரணங்கள் இருக்கிறது என்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்து வந்தன. உளவுத்துறையில் அதிக தொடர்புடையவரும், காவல்துறையை பின்புலமாகக் கொண்ட ஒருவரை ஆளுநராக, அதுவும் குறிப்பாக தமிழகத்திற்கு ஆளுநராக நியமிப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இப்படி பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழக ஆளுநராக நீக்கப்பட்டுள்ளார் ரவி. டெல்லியில் இருந்து வரும்போது கோட் சூட் சகிதம் ஹாலிவுட் கதாநாயகனைப் போல தமிழகத்துக்கு வருகை தந்தார் ரவி,  அடிப்படையில் காவல் துறையில் பல படி நிலைகளில் அதிகாரியாக இருந்தவர் என்பதால் இயல்பிலேயே அவரின் நடை உடை பாவனை கம்பீரமும், மிடுக்கும் உடையதாக இருக்கும். 

அவர் ஆளுநராக பொறுப்பேற்றது முதல் பாஜகவினர் அவருக்கு மிகுந்த வரவேற்ப்பையும், ஆதரவையும் வழங்கி வருகின்றது. இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அவரிடம் புகார் மனு வழங்கினர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வெள்ளை வேட்டி சட்டை சகிதம் கம்பீரமாக காட்சி அளித்தார். பாஜக என்றால் காவி நிறம் என்பதைத் தாண்டி ஆளுநரும், பாஜக தலைவர்களும் பளபளக்கும் தமிழர்களின் பாரம்பரிய வெள்ளை நிற வேட்டியில்  காட்சி அளிக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 
 

click me!