கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்.பி நீதிமன்றத்தில் சரண்... அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.

Published : Oct 11, 2021, 11:23 AM ISTUpdated : Oct 11, 2021, 11:28 AM IST
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்.பி நீதிமன்றத்தில் சரண்... அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.

சுருக்கம்

முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூர் திமுக எம்பி டி.ஆர்.எஸ் வி ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூர் திமுக எம்பி டி.ஆர்.எஸ் வி ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி, அதில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு (55) என்ற தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பின்னர் அதன் பிரேத பரிசோதனை அறிக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு கிடைக்கப்பெற்றது. அதில் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக தகவல் வெளியானது. 

இதையும் படியுங்கள்: அடகடவுளே.. இந்த தக்காளிக்கு வந்த வாழ்வை பாருங்க ..? ஒரு கிலே 80 ரூபாய்க்கு விற்பணை..

இந்த விவகாரத்தில் பாமக உள்ளிட்ட கட்சிகள் திமுக எம்பி தான் கொலைக்கு காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், முந்திர தொழிற்சாலையில் திருடுபோனதாகவும், அப்போது அது குறித்து போலீசில் புகார் கூறாமல் எம்.பி ரமேஷ் உள்ளிட்டோர் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராசு மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக மாற்றியுள்ளனர். இந்நிலையில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி ரமேஷ் அவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜன், வினோத் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், எம்பி, டி.ஆர்.வி ரமேஷ் தவிர்த்து மற்ற 5 பேரையும்  கடலூரில் உள்ள சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கடலூர் எம்.பி, டி.ஆர்.வி. ரமேஷ் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: கொஞ்சம் கூட அடங்காத துரைமுருகன்.. முதல்வர் ஸ்டாலின் குறித்து இழிவு பேச்சு.. தூக்கி உள்ளே வைத்தது போலீஸ்.

கடலூர் திமுக எம்.பி விவகாரம் தொடர்பாக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சுமார் 30 நிமிடம் ஆலோசனை நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழு தலைவர், டி.ஆர்.பாலு, எம்பிக்கள் டிகேஎஸ் இளங்கோவன், வில்சன், ஆர்.இளங்கோ, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் வேளாண் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக டிகேஎஸ் இளங்கோவனிடம் கேட்டபோது, (பதிவு செய்யப்படாத வாய்வழி தகவல்) கொலை வழக்கு தொடர்பாக எம்.பி ரமேஷ் தரப்பில் தொலைபேசி வாயிலாக கருத்து கேட்கப்பட்டதாகவும், தற்போதைய எம்.பி பதவியை ராஜினாமா செய்தால் நாமே குற்றவாளி என முடிவாகிவிடும், ஆகையால் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு திமுக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடலூர் எம்.பி., டி.ஆர்.வி எஸ் ரமேஷ் இன்று காலை பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!