அடி தூள்.. அதிமுக அவைத்தலைவர் இவர்தானா.?? இன்று ஓபிஎஸ், இபிஎஸ் முக்கிய முடிவு.

By Ezhilarasan BabuFirst Published Oct 11, 2021, 9:45 AM IST
Highlights


அதிமுகவின் புதிய அவைத் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்காட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற உள்ளது.

அதிமுகவின் புதிய அவைத் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்காட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற உள்ளது. அதே நேரத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் பொன்விழா ஆண்டு, சசிகலாவின் வருகை  மற்றும் அவரை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் அக்டோபர் 17ஆம் தேதி  அதிமுக 50 ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது, அதிமுக பொன்விழாவை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மிகச் சிறப்பாக கொண்டாட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்; அடகடவுளே.. இந்த தக்காளிக்கு வந்த வாழ்வை பாருங்க ..? ஒரு கிலே 80 ரூபாய்க்கு விற்பணை..

பொன் விழாவை மிக சிறப்பாக கொண்டாட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட  உதவிகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதேநேரத்தில் மதுசூதனன் மறைவுக்குப் பின்னர், அதிமுகவின் அவைத்தலைவர் பொறுப்பு யாருக்கு என்பது தொடர்பான எதிர்பார்ப்பும், அந்த பதவியை அடைய சீனியர்கள் மத்தியில் கடுமையான போட்டியும் இருந்து வருகிறது. அதே நேரத்தில் அக்கட்சியின் பொன்விழா ஆண்டு மலரை அவைத்தலைவர் வெளியிட வேண்டும் என்பதால், அதிமுகவுக்கு அவைத் தலைவரை விரைவில் நியமிப்பது அக்கட்சிக்கு கட்டாயமாக மாறியுள்ளது. 

காலியாக உள்ள அவைத்தலைவர் பதவிக்கு கட்சியில் உள்ள சீனியர்கள் பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, செங்கோட்டையன், தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார், சைதை துரைசாமி, உள்ளிட்டோரின் பெயர்கள் அடி போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் அமைப்பு செயலாளர்கள் உடன் இன்றைய முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. அதேபோல் ஒரு 16ம் தேதி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்திற்கு சசிகலா செல்ல உள்ளதாகவும், அப்போது அவர் அதிமுக தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்; முகத்துக்கு நேரா அடுக்கு மொழியில் ஓவர் புகழ்ச்சி... எல். முருகனை வெட்கத்தில் நெளிய வைத்த டி.ராஜேந்தர்.

அதே போல் அதிமுக கண்ணெதிரிலேயே வீணாவதை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது, விரைவில் நான் வருகிறேன் என சசிகலா நேற்கு பரபரப்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அவரின் நடவடிக்கைகளால் கட்சியில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்றும், அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும்  இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

click me!