எம்.பி பதவியில் இருந்து பாரி வேந்தரை உடனே தூக்குங்க.. ஸ்டாலினுக்கு பறந்த கடிதம் - பின்னணி இதுதானா.!

By Raghupati RFirst Published Sep 17, 2022, 11:09 PM IST
Highlights

சாதி இல்லை என்று சொல்லும் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்களோ,  அந்த சாதியை சேர்ந்தவரைத்தான்  வேட்பாளராக நிறுத்துகிறார்கள்.

கடந்த வாரம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,  பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஆர்.சத்யநாத உடையார் இல்ல திருமண விழா நடைபெற்றது. இத்திருமண விழாவினை தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னின்று நடத்தி வைத்தார். இவ்விழால் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.பாரிவேந்தர் பச்சமுத்து கலந்துகொண்டார். 

மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?

அப்போது பேசிய அவர், 'சாதி இல்லை என்று சொல்லும் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்களோ,  அந்த சாதியை சேர்ந்தவரைத்தான்  வேட்பாளராக நிறுத்துகிறார்கள். வளர்ந்த கட்சியினர் கல்யாண மேடைகளில் பேசிதான் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள்.நான் பாஜக கூட்டணியில் 2.40 லட்சம் வாக்குகள் பெற்றேன். பின்னர் மாற்று கூட்டணியில் 2.47 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். என்னை பொறுத்தவரை  எம்.பி பதவி என்பது எனது அடையாளத்தின் சிறு துளி. 

இதற்காக நான் போகாத இடத்திற்கு போய் இருக்க வேண்டாம். நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருப்பேன். இதனை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன். நாங்கள் அவசரப்பட்டு விட்டோம்' என்று பேசினார். இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளுக்கு..EPS என்ன எம்ஜிஆர், ஜெயலலிதாவா? தேர்தல் வரப்போகுது பார்த்துக்கோங்க..எடப்பாடியை அதிரவைத்த முன்னாள் அமைச்சர்கள் !

இந்த நிலையில் தேசிய முன்னேற்ற கழகம் கட்சியினர் அண்ணா அறிவாலயத்தில் புகார் மனு ஒன்றை இன்று அளித்தார்கள். இதுபற்றி பேசிய அவர்கள், 'கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆனால் பச்சமுத்து கடந்த சில மாதங்களாக தொடர்ந்து  திமுகவிற்கு எதிரான கருத்துகளை பேசி வருவதோடு திமுகவை தரம் தாழ்த்தி விமர்சித்து வருகிறார். எனவே பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்துவிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் பதவியை பறிக்க, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என்றும் கூறினார்கள்.

மேலும் செய்திகளுக்கு..“ஆத்திசூடி கேட்டா, சினிமா பாட்டை பாடுறான்..முருகனுக்கு தமிழ் மந்திரமே வேண்டாம்னு சொல்றாங்க” சீமான் அதிரடி.!

click me!