கனிமொழி எம்.பி. பதவிக்கு ஆபத்தா? காரசார வாதம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By vinoth kumar  |  First Published Apr 27, 2023, 12:36 PM IST

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சுமார் 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


தூத்துக்குடி திமுக எம்.பி.கனிமொழி தேர்தல் வெற்றி தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சுமார் 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி வேட்பு மனுவில் அவரது கணவர் அரவிந்தனின் பான் கார்டு எண்ணை குறிப்பிடவில்லை என கூறியிருந்தார். 

Latest Videos

சென்னை உயர் நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து வந்த நிலையில், அதை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கனிமொழியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தரப்பில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு இடைக்கால தடை விதித்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நிரந்தர கணக்கு என் என்பது இந்தியாவில் தான் உள்ளதே தவிர சிங்கப்பூரில் அல்ல. ஆவண உண்மை இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி ராமசுக் வழக்கின்  தீர்ப்பு விவரத்தை நீதிபதிகளிடம் எடுத்துரைத்தார். எதிர்மனு தாரர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கனிமொழியின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

click me!