கே.பி முனுசாமி இடத்திற்கு கனிமொழி, வைத்தியலிங்கம் இடத்திற்க்கு ராஜேஷ்குமார் வேட்பு மனு.. திமுக அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 21, 2021, 1:43 PM IST
Highlights

இதனால் அவ்விரு இடங்களும் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து, திமுக சார்பாக மாநிலங்களை உறுப்பினர்களுக்கான வேட்பாளராக கனிமொழி சோமு மற்றும் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 

தமிழ்நாட்டில் காலியாக உள்ள எம்.பி  இடங்களுக்கான தேர்தல் வாக்குபதிவு அக்டோபர் 4 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக வேட்பாளர்கள் டாக்டர்  கனிமொழி, ராஜேஷ்குமார் ஆகியோர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில்  வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர். 

அதிமுகவின்  மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதை தொடர்ந்து  தங்களுடைய எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் அவ்விரு இடங்களும் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து, திமுக சார்பாக மாநிலங்களை உறுப்பினர்களுக்கான வேட்பாளராக கனிமொழி சோமு மற்றும் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இன்று   சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். முனுசாமி இடத்திற்கு கனிமொழியும், வைத்தியலிங்கம் இடத்திற்க்கு ராஜேஷ்குமாரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்நிகழ்வின் போது அமைச்சர் கே.என் நேரு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி,மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா,வில்சன் என்.ஆர்.இளங்கோ,உள்ளிட்டோர். உடனிருந்தனர். 

காலியான இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4 ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 15 ம் தேதி தொடங்கிய நிலையில்,  22 ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் 23 வேட்பு மனு பரிசிலினையும், செப்டம்பர் 27 ம் தேதி மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!