உங்களைலாம் சுளுக்கு எடுத்து அனுப்பிடுவேன்.. வாணியம்பாடியில் அதிகாரிகளை மிரட்டும் திமுக எம்.எல்.ஏ வீடியோ

By karthikeyan VFirst Published May 16, 2021, 3:52 PM IST
Highlights

வாணியம்பாடி தொகுதியில் உள்ள பெத்த வேப்பம்பட்டு பகுதியில் அதிமுக எம்.எல்.ஏ செந்தில் குமார் நியாயவிலை கடையில் நிவாரண நிதி வழங்கிவிட்டு சென்றதை அறிந்த ஜோலார்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏவும் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளருமான தேவராஜ், நியாயவிலை கடை ஊழியரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.4000 வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ரூ.2000 வழங்கப்பட்டுவருகிறது. அந்தவகையில், வாணியம்பாடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான செந்தில் குமார் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண நிதியை பயனாளிகளுக்கு வழங்கி இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.

அவரது சொந்த ஊரான பெத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் அப்பகுதி மக்களுக்கு நிவாரண நிதியை வழங்கினார். அவர் நிவாரண நிதி வழங்கிவிட்டு சென்ற பின்னர், அங்கு சென்ற திமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவுமான தேவராஜ், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் நியாயவிலை கடை ஊழியர்களை மிரட்டினார்.

கட்சியினர் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் பெத்த வேப்பம்பட்டு நியாயவிலை கடைக்கு சென்ற திமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை எம்.எல்.ஏவுமான தேவராஜ், நான் ஜோலார்பேட்டைக்கு மட்டும் எம்.எல்.ஏ அல்ல.. இந்த மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. உங்களை எல்லாம் சுளுக்கு எடுத்து அனுப்பிவிடுவேன் என்று மிரட்டினார். 

"

அதிகாரிகள் மற்றும் நியாயவிலை கடை ஊழியர்களை திமுக எம்.எல்.ஏ தேவராஜ் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 -
ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் எம்எல்ஏ அல்ல 4 சட்டமன்ற தொகுதிக்கும் நான்தான் மாவட்ட செயலாளர் என மிரட்டும் தோனியில் பேசி அரஜாகத்தில் ஈடுபடும் சம்பவம் சமூக  வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!