மார்ச் 18ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்... அறிவித்தது திமுக தலைமை!!

Published : Mar 14, 2022, 07:17 PM IST
மார்ச் 18ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்... அறிவித்தது திமுக தலைமை!!

சுருக்கம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள  பேரவை மண்டபத்தில் மார்ச் 18 ஆம் தேதி நடப்பாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 18 மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்போர் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது. மார்ச் 18 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மார்ச் 18 ஆம் தேதி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அரசு கொறடா கோவி.செழியன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதனடிப்படையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டமானது நடைபெற இருக்கிறது. பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் யார் யார் பங்கேற்பது, விவாதங்களை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருக்கிறது. சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் 19 ஆம் தேதியா அல்லது 21 ஆம் தேதியா என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!