திமுக எம்எல்ஏ கார் விபத்து.. அதிஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.. 5 பேர் காயம்..!

Published : May 31, 2021, 01:04 PM IST
திமுக எம்எல்ஏ கார் விபத்து.. அதிஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.. 5 பேர் காயம்..!

சுருக்கம்

வத்தலகுண்டு அருகே சரக்கு வாகனம், 2 கார்கள் அடுத்தடுத்து மோதியதில் ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ சிறிய காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

வத்தலகுண்டு அருகே சரக்கு வாகனம், 2 கார்கள் அடுத்தடுத்து மோதியதில் ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ சிறிய காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன். இவர் சொந்த வேலையாக திண்டுக்கல்லுக்கு நேற்று காரில் சென்றார். வத்தலகுண்டு புறவழிச் சாலையில் சென்றபோது சாலையின் குறுக்கே மினி லாரி ஒன்று கடந்து செல்ல முயன்றது. அப்போது தேனியில் இருந்து திண்டுக்கல் சென்ற கார் மினி லாரி மீது மோதியது. பின்னால் வந்த மகாராஜன் எம்எல்ஏ காரும் அந்த கார் மீது மோதியது. இதில் லேசான காயங்களுடன் எம்எல்ஏ உயிர் தப்பினார். 

வாழைத்தார் ஏற்றி வந்த மினி லாரியில் பயணம் செய்த 5 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு மகாராஜன் எம்எல்ஏ அனுப்பி வைத்தார். இந்த விபத்தில் 2 கார்களும் சேதமடைந்தன. 

இதுதொடர்பாக வத்தலகுண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திமுக எம்எல்ஏ கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!