DMK: கட்சி பதவி பறிக்கப்பட்ட கையோடு அடுத்த ஆப்பு ரெடி.. சிக்கலில் திமுக எம்எல்ஏ.கே.பி. சங்கர் ..!

Published : Jan 29, 2022, 12:38 PM IST
DMK: கட்சி பதவி பறிக்கப்பட்ட கையோடு அடுத்த ஆப்பு ரெடி.. சிக்கலில் திமுக எம்எல்ஏ.கே.பி. சங்கர் ..!

சுருக்கம்

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து  திமுக எம்எல்ஏ கே.பி. சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனையடுத்து, நேற்றைய தினம் திமுக எம்எல்ஏ கே.பி. சங்கர் கட்சி பதவி பறிக்கப்பட்டது. 

மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏ கே.பி. சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மாநகராட்சி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் ரூ.3 கோடிக்கு மாநகராட்சி சாலை இணைப்பு உள்கட்டமைப்பு நிறுவனத்துக்கு சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு, நடராஜன் கார்டன் முதல் தெரு, 2வது மற்றும் 3வது தெருவில் சாலைகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வந்தது. அப்பொழுது, எம்.எல்.ஏ., தனது ஆட்களுடன் அந்த இடத்திற்கு வந்து சாலை போடும் பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதையடுத்து, உதவி பொறியாளர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க முயற்சி செய்தபோது, அவரை எம்.எல்.ஏ தாக்கியுள்ளார். 

அதுமட்டுமல்ல அங்கே சாலை பணிகளுக்காக 13 லாரிகளில் கொண்டு வரப்பட்ட கட்டுமான பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த உதவிப் பொறியாளர் அச்சத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து  திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனையடுத்து, நேற்றைய தினம் திமுக எம்எல்ஏ கே.பி. சங்கர் கட்சி பதவி பறிக்கப்பட்டது.

 

அரசு அதிகாரியை தாக்கிய வழக்கில் இதுவரை புகார் அளிக்கவில்லை குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி சார்பில் எழுத்து பூர்வமாக மின்னஞ்சலில் சென்னை  காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அடுத்தக்கட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?