மருத்துவமனையில் அடைக்கலமான கருணாஸ்...! தேடிச்சென்று ஆறுதல் சொன்ன தி.மு.க. எம்.எல்.ஏ.!

Published : Oct 03, 2018, 03:14 PM ISTUpdated : Oct 03, 2018, 04:01 PM IST
மருத்துவமனையில் அடைக்கலமான கருணாஸ்...! தேடிச்சென்று ஆறுதல் சொன்ன தி.மு.க. எம்.எல்.ஏ.!

சுருக்கம்

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கருணாஸை, திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கருணாஸை, திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த 16 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர்
கருணாஸ், முதலமைச்சரையும், காவல் துறையினரையும் அவதூறாக பேசியதாக 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், அவரை கைது செய்ய நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுதலையான பிறகும், தமிழக அரசையும், முதலமைச்சரையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில், தமிழ்நாடு தேவர் பேரவை அமைப்பினரோடு கருணாஸ் தரப்புக்கு மோதல் ஏற்பட்டது. இதில், தேவர் பேரவையைச் சேர்ந்த முத்தையா என்பவரு கார் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்தச் சம்பவம் தொடர்பாக கருணாசின் சாலிகிராம வீட்டை சுற்றிவளைத்த போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். ஆனால் கருணாஸ் அங்கு இல்லாததால் அவர்கள் வெளியேறினர். ஆனாலும் கருணாஸ் கைது செய்வது என்ற முடிவில் போலீசார் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கருணாஸ் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கருணாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கருணாசுக்கு எதிராக எடப்பாடி அரசு பல்வேறு எதிர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் இருக்கும் கருணாசை, ஜெ.அன்பழகன் சென்று சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் பிறகு, அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன், கருணாசை சந்தித்து ஆறுதல் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி