திமுக எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்..!

Published : Jun 27, 2020, 11:19 AM ISTUpdated : Jun 28, 2020, 01:45 PM IST
திமுக எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்..!

சுருக்கம்

செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வும், மருத்துவருமான  ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வும், மருத்துவருமான  ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 18,552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது 5-ம் கட்டமாக அமலில் உள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம்,  செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஒரு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுகவில் மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார்.

சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடந்த 10ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானார். 

PREV
click me!

Recommended Stories

திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!
பெரியாரும், அண்ணாவும், எம்.ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து... நீங்க மட்டும்தான் சொந்தம் கொண்டாடணுமா..? ஆத்திரப்படும் விஜய்..!