மோடியின் செயல்பாடு கொரோனா வைரசை விட மோசமானது... சிவசேனா தாக்கு..!

By Thiraviaraj RMFirst Published Jun 27, 2020, 10:20 AM IST
Highlights

பீகார் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ராணுவ வீரர்களின் வீரத்தில் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடு காட்டுகிறார் என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. 
 

பீகார் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ராணுவ வீரர்களின் வீரத்தில் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடு காட்டுகிறார் என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. 

கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், பீகாரில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தில் பிரதமர் மோடி பாகுபாடு காட்டுவதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ’’லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீனா இடையிலான சண்டையில் பீகாரை சேர்ந்த ராணுவ படைப்பிரிவின் வீரத்தை பிரதமர் மோடி பாராட்டுகிறார். நாடு எல்லையில் நெருக்கடியை சந்தித்து வரும் போது மஹர், மராத்தா, ராஜ்புத், சீக்கியர்கள், கோர்க்கா, டோக்ரா ஆகிய படைப்பிரிவினர் அமைதியாக உட்கார்ந்து கொண்டு புகையிலை மென்று கொண்டிருந்தார்களா?

மராட்டியத்தை சேர்ந்த வீரர் சுனில் காலே என்பவர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் வீரமரணம் அடைந்தார். பீகாரில் தேர்தல் வருவதால் இந்திய ராணுவத்தில் சாதி மற்றும் பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு அரசியல் நோய், கொரோனா வைரசை விடவும் இது மோசமானது’’ என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

click me!