"சீமான் அநாகரீகமானவர்" "ராமதாஸ் காழ்ப்புணர்ச்சி அரசியல்வாதி"..!! வெளிநாட்டிலிருந்து வந்தகையோடு வறுத்தெடுத்த பெண் எம்.பி

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2019, 2:26 PM IST
Highlights

பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் முரசொலி கட்டிடம் பஞ்சமி  நிலத்தை  ஆக்கிரமித்து கட்டப்பட்டது என கருத்து வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார், அதற்கு  திமுக தலைவர் மு. க ஸ்டாலின் முரசொலி அலுவலக  பட்டாவை ட்விட்டரில் பதிவிட்ட ராமதாசுக்கு பதிலடி கொடுத்தார்.  இதுகுறித்து கனிமொழியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்,  அதற்கு பதிலளித்த அவர், முரசொலி அலுவலகம் தொடர்பாக ராமதாஸ் தெரிவித்த கருத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது,

செர்பியாவில் இருந்து திரும்பிய கையோடு, "சீமான் அநாகரீகமானவர்" என்றும், "ராமதாஸ் காழ்ப்புணர்ச்சி" அரசியல்வாதி என்றும் திமுக எம்பி கனி மொழி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

வெளிநாட்டிலிருந்து வந்த கையோட சீமானையும், பாமக நிறுவனர் ராமதாஸையும் ஒரு தாக்கு தாக்கியிருக்கிறார்  திமுக  மகளிரணி செயலாளரும், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி... தமிழகத்தில் விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி  இடைத்தேர்தலில் அதிமுக, திமுக நேர் எதிராக களத்தில் இருப்பதால் அங்கு பிரச்சாரம் அனல் பறக்கிறது.  சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் தாறுமாறாக தாக்கி வருகின்றனர். இந் நிலையில் நாம் தமிழர் கட்சியின் பிரசாரத்தின்போது முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது  நாங்கள்தான்  (விடுதலைப்புலிகள்) என்பதுபோல பேசியிருந்தார் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன்,  பல அரசியல் கட்சியினர் சீமானை கண்டித்தனர்.  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில்  சீமானின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் சொந்த வேலையாக செர்பியா சென்றிருந்த திமுக எம்பி கனிமொழி, சென்னை திரும்பினார்.  அப்போது  ராஜீவ் படுகொலை பற்றி சீமான் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்,  அதற்கு பதில் அளித்த கனிமொழி,  ராஜீவ் காந்தி படுகொலை குறிக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ள கருத்து மிகவும் அநாகரீகமானது,  என்றார்,  அதேபோல் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் முரசொலி கட்டிடம் பஞ்சமி  நிலத்தை  ஆக்கிரமித்து கட்டப்பட்டது என கருத்து வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார், அதற்கு  திமுக தலைவர் மு. க ஸ்டாலின் முரசொலி அலுவலக  பட்டாவை ட்விட்டரில் பதிவிட்ட ராமதாசுக்கு பதிலடி கொடுத்தார்.  இதுகுறித்து கனிமொழியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்,  அதற்கு பதிலளித்த அவர், முரசொலி அலுவலகம் தொடர்பாக ராமதாஸ் தெரிவித்த கருத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது, அதை திமுக பொருட்படுத்தாத் தேவையில்லை என்றார் நிதானமாக. 

click me!