கலைஞரின் உழைப்பு அய்யா இது... பாமக ராமதாசுக்கு எதிராக வெகுண்டெழுந்த கனிமொழி..!

By vinoth kumarFirst Published Oct 19, 2019, 2:25 PM IST
Highlights

பஞ்சமி நிலம் குறித்து ஸ்டாலின் - ராமதாஸ் கருத்து மோதல் குறித்து செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அவர் கூறுகையில் இது அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தளபதி அவர்கள் கூறியது போல் ராமதாஸ் கூறுவதில் உண்மை இருந்தால் அவர் அதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். 

பஞ்சமி நிலம் தொடர்பாக ராமதாஸ் ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி ஆவேசமாக பேசியுள்ளார். மேலும், ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியது அநாகரீகமானது என கருத்து தெரிவித்துள்ளார்.

உலக நாடாளுமன்ற அமைப்பு சார்பில் செர்பியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கனிமொழி இன்று சென்னை திரும்பினார். பின்னர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அசுரன் படத்தில் பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமே பஞ்சமி நிலம் தான் என ராமதாஸ் கூறியிருந்தார்.

பஞ்சமி நிலம் குறித்து ஸ்டாலின் - ராமதாஸ் கருத்து மோதல் குறித்து செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அவர் கூறுகையில்  இது அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தளபதி அவர்கள் கூறியது போல் ராமதாஸ் கூறுவதில் உண்மை இருந்தால் அவர் அதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். முரசொலி எப்போது உருவாக்கப்பட்டது, எப்படி உருவாக்கப்பட்டது, தலைவர் கருணாநிதி அவர்களின் உழைப்பு அதன்பின்னால் எந்த அளவு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றார். 

மேலும், ராஜீவ் கொலை குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரிகமானது என கூறியுள்ளார்.

click me!