கூட்டணி கட்சியினருக்கு சீட்.. அமைச்சர் செந்தில் பாலாஜியை ரவுண்ட் கட்டிய திமுவினர்.. கோவை தேர்தல் பஞ்சாயத்து !!

Published : Jan 31, 2022, 07:13 AM IST
கூட்டணி கட்சியினருக்கு சீட்.. அமைச்சர் செந்தில் பாலாஜியை ரவுண்ட் கட்டிய திமுவினர்.. கோவை தேர்தல் பஞ்சாயத்து !!

சுருக்கம்

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு திமுகவினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம்,  அவிநாசி சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை துவக்கி வைக்க தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து அவர் திரும்பும் நிலையில், திமுகவினர் அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 18 மற்றும் 54 வது வார்டுகளில் வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாகவும் திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சியினருக்கு சீட் வழங்கியதை கண்டித்து திமுகவினர் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வாகனத்தை முற்றுகையிட முயற்சித்தனர் என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருக்கும் மூன்று வாயில்களிலும் திமுகவினர் சூழ்ந்துகொண்டு அமைச்சரை சந்தித்து பேச காத்திருந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதை அடுத்து அமைச்சரின் வாகனம் செல்லும் முன்பாக கூடிய திமுகவினர் திமுக கட்சியினருக்கு அப்பகுதியில் சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சிக்கு சீட்டு வழங்கியதை கண்டித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து பதில் ஏதும் சொல்லாமல்  அமைச்சர் வாகனத்தில் சட்டென்று புறப்பட்டுச் சென்றார். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவினரை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் அமைச்சரின் தலைமையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் சுகுணா ஆடிட்டோரியத்தில் அதிருப்தியாளர்கள் பெண்கள் உட்பட கூடி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவினருக்கு உரிய சீட் ஒதுக்காமல், கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கியதால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக  திமுகவினர் கடும் அப்செட்டாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி