சொத்து வரி உயர்வுக்கு காரணம் நாங்க இல்ல.. அவங்க தான் காரணம்..' பாஜக மீது பழி போட்ட கே.என்.நேரு

Published : Apr 05, 2022, 02:06 PM IST
சொத்து வரி உயர்வுக்கு காரணம் நாங்க இல்ல.. அவங்க தான் காரணம்..' பாஜக மீது பழி போட்ட கே.என்.நேரு

சுருக்கம்

சொத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளது, கூரை வீடுகளுக்கு வரி உயர்வு இல்லை.  1989ஆம் ஆண்டில் இருந்த பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டது.  

சொத்து வரி உயர்வு :

தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி உத்தரவிட்டது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில்  600 சதுரஅடி முதல் 1200 சதுரஅடி வரை 75 சதவீத சொத்து வரி உயர்த்தப்பட இருக்கிறது. ஏற்கெனவே, 600 சதுரஅடிக்கு ரூபாய் 810 சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1215 உயர்த்தப்பட்டிருக்கிறது. 

1201 சதுரஅடி முதல் 1800 சதுரஅடி வரை 100 சதவீதத வரி உயர்வும், 1801 சதுரஅடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 150 சதவீத சொத்து வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வணிக வளாகங்களுக்கு 150 சதவீத வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100 சதவீத வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, திமுக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. இன்று தமிழகம் முழுக்க அதிமுக போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

 அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் :

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு , ‘சென்னையில் நிலத்தின் மதிப்பை கணக்கிட்டுதான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளது, கூரை வீடுகளுக்கு வரி உயர்வு இல்லை.  1989ஆம் ஆண்டில் இருந்த பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டது.  

ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் பிற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் சொத்து வரி குறைவுதான். தமிழகத்தில் 100% முதல் 150% சொத்து வரி  உயர்வு 7% வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.  1.4% குடியிருப்புகளுக்கு மட்டுமே 150% வரி வரை உயர்த்தப்படுகிறது. 83% வீடுகளுக்கு 25% முதல் 50% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது’ என்று விளக்கம் அளித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!